நேற்றுடன் திடீர் ஓய்வு.. அழுத ஆப்கானிஸ்தான் வீரர்.. தோனி சாதனையை முறியடித்தவருக்கு கிடைத்த கவுரவம்!
துபாய்: டி20 உலக கோப்பை தொடர் நடந்து கொண்டிருக்கும் நிலையிலேயே ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர் அஸ்கர் ஆப்கன் ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் கண்ட மிகச் சிறந்த கேப்டனான அவருக்கு சக வீரர்கள் "கார்ட் ஆப் ஹானர்" மூலம் பிரியா விடை கொடுத்தனர்.
பரிசளிப்பு நிகழ்ச்சியில் பேசிய அஸ்கர், உடைந்து அழுதுவிட்டார். இத்தனை நெகிழ்ச்சியும், நேற்றைய ஆப்கானிஸ்தான் மற்றும் நபீயா அணிகள் இடையேயான போட்டியின்போது அரங்கேறின.

கடைசி போட்டியில் அசத்தல்
ஞாயிற்றுக்கிழமை நமீபியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்காக கடைசியாக ஆடினார் ஆப்கானிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் அஸ்கர் ஆப்கான். அவர் பேட் செய்ய வந்தபோது மைதானத்தில் அணி வீரர்கள் அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளித்தனர். அஸ்கர் ஆப்கான் தனது கடைசி இன்னிங்ஸில் 23 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து அசத்தினார்.

விக்கெட்டை கொண்டாடவில்லை
அஸ்கர் மைக்கேல் கேட்ச் கொடுத்து அவுட்டாகி வெளியேறியதும் மைதானத்தில் இருந்த நமீபியா வீரர்கள் அஸ்கரிடம் கைகுலுக்கினர். அஸ்கர் ஆப்கான் டிரஸ்ஸிங் அறைக்கு திரும்பியதும் சக வீரர்கள் எழுந்து நின்று மரியாதை செய்தனர். மேலும், இந்த முன்னாள் கேப்டனின் விக்கெட்டை வீழ்த்தியபோது, நமீபியா வீரர்கள் அதை கொண்டாடவில்லை. இதுதான் அஸ்கருக்கு கிடைத்த மற்றொரு மரியாதை.
Recommended Video

உடைந்து அழுதார்
கடைசி இன்னிங்ஸை ஆடிய அஸ்கர், பின்னர் பரிசளிப்பு நிகழ்ச்சியில் பேசியபோது 'இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க விரும்புகிறேன். இளைஞர்கள் முன்வர இதுவே சரியான தருணம். பெரும்பாலான மக்கள் இந்த போட்டித் தொடர் முடியும் வரை ஆட்டத்தை தொடருமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால் பாகிஸ்தானுக்கு எதிரான தோல்விக்குப் பிறகு இது சரியான நேரம் என்று நினைத்தேன். பாகிஸ்தானுக்கு எதிரான தோல்வியால் நாங்கள் உடைந்து போனோம் (இத்தனைக்கும் ஆப்கன் அணி போராடி 19வது ஓவரில்தான் தோற்றது). ஆப்கன் அணியுடன் எனக்கு நிறைய நல்ல நினைவுகள் உள்ளன, அது எனக்கு கடினமாக உள்ளது' என்று தெரிவித்தார். அப்போது அவர் உடைந்து அழுதுவிட்டார்.

வெற்றிகரமான கேப்டன்
வலது கை பேட்ஸ்மேனான அஸ்கர் ஆப்கான் ஆப்கானிஸ்தானுக்காக 6 டெஸ்ட், 114 ஒருநாள் மற்றும் 75 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார், அதில் அவர் முறையே 440, 2424 மற்றும் 1382 ரன்கள் குவித்துள்ளார். அஸ்கர் ஆப்கான் தற்போது டி20 சர்வதேச போட்டிகளில் உலகின் வெற்றிகரமான கேப்டனாக இருந்தார். மொத்தம் 41 வெற்றிகள் என்ற இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் சாதனையை அஸ்கர் முறியடித்தார். அஸ்கர் 52 டி20 போட்டிகளில் ஆப்கானிஸ்தானுக்கு கேப்டனாக இருந்தார், அதில் அணி 42 போட்டிகளில் வெற்றி பெற்றது. இதில் பல சிறு அணிகள் என்பதும் கவனிக்கத்தக்கது.

மோர்கனுக்கு வாய்ப்பு
வரும் காலங்களில் அஸ்கர் தலைமையிலான ஆப்கானின் சாதனையை இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் முறியடிக்க வாய்ப்பு உள்ளது. மோர்கன் தலைமையின் கீழ் 40 சர்வதேச டி20 போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளது. மோர்கன் கேப்டனாக தொடர்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீண்ட நாள் கேப்டன்
அஸ்கர் ஆப்கானிஸ்தானை 59 ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளிலும் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வழிநடத்தினார். ஒருநாள் போட்டிகளில் இவரது தலைமையில் ஆப்கானிஸ்தான் அணி 34 போட்டிகளில் வெற்றியும், 21ல் தோல்வியும் கண்டுள்ளது. இத்தகையை ஆப்கானிஸ்தான் ஜாம்பவானுக்குதான் இப்படியான ஒரு மரியாதையுடன் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. உலக கோப்பை தொடரில் ஆப்கன் கேப்டனாக முகமது நபி செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications