துபாய் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எத்தனை வருட ஏக்கம்.. பாபர் வின்னிங் ஷாட் அடித்ததும் உடைந்து அழுத அந்த நபர் யார்? உருக்கமான பின்னணி

Google Oneindia Tamil News

துபாய்: இந்தியாவிற்கு எதிரான உலகக் கோப்பை டி 20 போட்டியில் பாகிஸ்தான் வென்ற நிலையில்.. ரசிகர்கள் அரங்கில் உட்கார்ந்து இருந்த நபர் ஒருவர் கண்ணீர் விடும் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.

நேற்று நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான உலகக் கோப்பை டி 20 ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது. முதல்முறை உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தி உள்ளது

நேற்று இந்த போட்டியில் பாகிஸ்தான் வென்றதன் மூலம் பல வருட ஏக்கத்திற்கு அந்த அணி முடிவு கட்டி வருகிறது. வரிசையாக 12 முறை உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியாவிடம் பாகிஸ்தான் வீழ்ந்து உள்ளது. அதிலும் உலகக் கோப்பை டி 20 போட்டிகளில் ஒருமுறை கூட பாகிஸ்தான் இந்தியாவிடம் வென்றது கிடையாது. இந்த நிலையில்தான் இன்று 13வது போட்டியில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தி உள்ளது.

என்ன ஆச்சு?.. பாதி போட்டியில் மைதானத்தை விட்டு வெளியேறிய முக்கிய இந்திய வீரர்.. சிக்கல் மேல் சிக்கல்என்ன ஆச்சு?.. பாதி போட்டியில் மைதானத்தை விட்டு வெளியேறிய முக்கிய இந்திய வீரர்.. சிக்கல் மேல் சிக்கல்

பாகிஸ்தானின் 12 தோல்வி மற்றும் ஒரு வெற்றி புள்ளி விவரம்,

பாகிஸ்தானின் 12 தோல்வி மற்றும் ஒரு வெற்றி புள்ளி விவரம்,

  • 1992 50 ஓவர் உலகக் கோப்பை- இந்தியா
  • 1996 50 ஓவர் உலகக் கோப்பை- இந்தியா
  • 1999 50 ஓவர் உலகக் கோப்பை- இந்தியா
  • 2003 50 ஓவர் உலகக் கோப்பை- இந்தியா
  • 2007 டி20 உலகக் கோப்பை - இந்தியா
  • 2007 டி20 உலகக் கோப்பை- இந்தியா
  • 2011 50 ஓவர் உலகக் கோப்பை- இந்தியா
  • 2012 டி20 உலகக் கோப்பை- இந்தியா
  • 2014 டி20 உலகக் கோப்பை- இந்தியா
  • 2015 50 ஓவர் உலகக் கோப்பை- இந்தியா
  • 2016 டி20 உலகக் கோப்பை- இந்தியா
  • 2019 50 ஓவர் உலகக் கோப்பை- இந்தியா
பாபர் அசாம்

பாபர் அசாம்

பாகிஸ்தானின் பல ஜாம்பவான் கேப்டன்கள் நிகழ்த்த முடியாத சாதனையை பாகிஸ்தான் கேப்டன் பாபர் நிகழ்த்தி இருக்கிறார். அதிலும் அவர் இந்திய அணியை பார்ம் இல்லாத போது வீழ்த்தவில்லை. கோலி கேப்டன்சி, ரோஹித், ராகுல், பண்ட், சூர்யா குமார் யாதவ், பும்ரா, ஜடேஜா போன்ற தரமான வீரர்கள் இருக்கும் போது தோனி மென்டர் செய்யும் அணியை வீழ்த்தி இருக்கிறார். மிக முக்கியமாக ஒரு விக்கெட் கூட இழக்காமல் பாகிஸ்தான் இந்தியாவை மிகப்பெரிய சேஸிங்கில் வீழ்த்தி இருக்கிறது.

கொண்டாட்டம்

கொண்டாட்டம்

நேற்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது. இதன்பின் களமிறங்கிய பாகிஸ்தான் அணி வெறும் 175 ஓவரிலேயே 152 ரன்கள் எடுத்து வென்றது. இந்தியாவிற்கு எதிரான இந்த வெற்றியை பாகிஸ்தானில் நேற்று கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் திருவிழா போல கொண்டாடினார்கள். தங்கள் வீட்டிற்கு வெளியே வெடி வெடித்து மிகப்பெரிய அளவில் இந்த வெற்றியை கொண்டாடினார்கள். பாகிஸ்தான் கிரிக்கெட் உலகக் கோப்பை வரலாற்றில் பாபர் கேப்டன்சிக்கு கீழ் சத்தமின்றி ஒரு சாகப்தம் படைத்து உள்ளது.

Recommended Video

    Virat kohli Reaction after match lost against Pakistan | IND Vs PAK | Oneindia Tamil
    வீடியோ

    வீடியோ

    இந்த நிலையில்தான் நேற்று 17.5வது ஓவரில் பாபர் வின்னிங் ஷாட் அடித்து இரண்டு ரன்கள் எடுத்தார். இந்த ஷாட் அடித்ததும் மொத்த பாகிஸ்தான் ரசிகர் பட்டாளமும் எழுந்து நின்று ஆரவாரமாக கோஷம் எழுப்பினார்கள். பாகிஸ்தானின் வரலாற்று சாதனையை கோஷம் எழுப்பி கொண்டாடினார்கள். அப்போது ஸ்பெஷல் ரசிகர்கள் அரங்கில் உட்கார்ந்து இருந்த ஒரு நபர் கண்ணீர்விட்டு அழுதார். அவரை அருகில் இருந்த பாகிஸ்தான் அணி நிர்வாகிகள் கட்டிபிடித்து தேற்றினார்கள்.

    ஆனந்த கண்ணீர்

    ஆனந்த கண்ணீர்

    பாகிஸ்தான் வெற்றிபெற்ற மகிழ்ச்சியில் அவர் ஆனந்த கண்ணீர்விட்டது இணையம் முழுக்க வைரலானது. இந்த வீடியோவை பலர் ஷேர் செய்து யார் அந்த நபர்? என்று கேட்டு இருந்தனர். இந்த நிலையில் உருக்கமாக கண்ணீர்விட்ட அந்த நபர் பாபர் அசாமின் தந்தை அசாம் சித்திக்கு என்று தெரிய வந்துள்ளது. பாகிஸ்தானின் ஜாம்பவான் கேப்டன்கள் நிகழ்த்த முடியாத சாதனையை.. தனது மகன் முறியடித்ததை எண்ணி இவர் ஆனந்த கண்ணீர் விட்ட வீடியோ இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.

    உருக்கம்

    உருக்கம்

    பாபர் அசாமின் தந்தையின் இந்த வீடியோவை இந்தியர்கள் உட்பட பலர் பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோவை பகிர்ந்த கிரிக்கெட் விமர்சகர் ஒருவர்.. "இது பாரின் தந்தை. அவரை நினைத்து எனக்கு சந்தோசமாக உள்ளது. பாபர் பாகிஸ்தான் அணிக்குள் வருவதற்கு 3 வருடங்களுக்கு முன் 2012ல் இவரை நான் பார்த்தேன். அப்போது பாபர் மட்டும் பாகிஸ்தான் அணிக்குள் வரட்டும்.. அதன்பின் மொத்த மைதானமும் அவர் கட்டுப்பாட்டில்தான் இருக்கும் என்று கூறினார்" என்று உருக்கமான பின்னணியை வெளியிட்டுள்ளார். பாபரின் அப்பா சொன்னது போலவே நேற்று மொத்த மைதானமும் அவரின் கட்டுப்பாட்டில் இருந்தது!

    English summary
    T20 world cup Ind vs Pak match: Babar Azam father's video goes viral after the historical victory of men in green.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X