துபாய் வேலை vs இந்தியாவில் சொந்த தொழில்.. எது சிறந்தது! 10 ஆண்டு அமீரக வாழ்க்கைக்கு பின் இந்தியர் நறுக்

Subscribe to Oneindia Tamil

துபாய்: சுமார் 10 ஆண்டுகளாக துபாயில் வேலை செய்து வரும் இந்தியர் ஒருவர் தான் தாய்நாட்டிற்குத் திரும்ப விரும்புவதாகச் சொல்லியுள்ளார். மேலும், துபாய் வேலைக்கும் இந்தியாவில் சொந்தமாகத் தொழில் செய்வதற்கும் இடையே எது சிறந்தது என்பதையும் ஒப்பிடும் வகையில் அவர் சில கருத்துகளைப் பதிவிட்டுள்ளார். அவரது இந்த போஸ்ட் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!

துபாய் கச்சா எண்ணெய்யை மட்டும் சார்ந்து இருக்காமல் தனது பொருளாதாரத்தைப் பல்வேறு துறைகளிலும் டெவலப் செய்து வருவது அனைவருக்கும் தெரியும். இதனால் அங்கு ஐடி துறையும் வேகமாக வளர்ந்து வருகிறது. அந்த ஐடி துறையில் வேலை செய்யவும் இந்தியாவில் இருந்து பலரும் துபாய்க்கு செல்கிறார்கள்.

UAE Indian Expat compares Quitting Dubai Job vs own Business in India Which is best overall

துபாய் இந்தியர்

அப்படி துபாய்க்கு சென்றாலும் கூட பெரும்பாலான மக்கள் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு இந்தியா திரும்பிவிடவே விரும்புகிறார்கள். இதற்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. இதற்கிடையே துபாயில் பணிபுரியும் சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் தான் இந்தியாவுக்குத் திரும்ப விரும்புவதாகக் கூறியுள்ளார்.

சுமார் 10 ஆண்டுகளாக துபாயில் வேலை செய்யும் அவர், இந்தியாவுக்குத் திரும்பும் எண்ணத்தில் இருக்கிறாராம். இது தொடர்பாக அவர் தனது கருத்துகளை ரெட்டிட் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் துபாய் தொழில்நுட்பத் துறை சந்திக்கும் சவால்கள் மற்றும் தனது பிளான் குறித்து விரிவாக விளக்கியுள்ளார்.

துபாய் வேலை

அதில் அவர், சாப்ட்வேர் வேலையை விட்டுவிட்டு இந்தியாவுக்குத் திரும்ப விரும்புவதாகவும் இந்தியாவில் சொந்தமாகத் தொழில் தொடங்குவது குறித்து சிந்தித்து வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். துபாயில் ஐடி துறையில் பணிப் பாதுகாப்பு இல்லை என்றும் அடிக்கடி நிகழும் ஆட்குறைப்புக் காரணமாகப் பலரும் மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும் அவர் கவலை தெரிவித்தார். இதனால் அங்கு நிச்சயமற்ற ஒரு சூழலே நிலவுவதாகவும் அதில் கூறியுள்ளார்.

மேலும், ஐடி துறையில் வேலைப்பளு அதிகமாக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இது மனச்சோர்வை ஏற்படுத்துவதாகவும், தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் போதிய நேரம் செலவிட முடிவதில்லை எனவும் அவர் வருத்தம் தெரிவித்தார். துபாயில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள் குறித்தும் அவர் குறிப்பிடத் தவறவில்லை. இதுவே அவர் இந்த முடிவை எடுக்க முக்கிய காரணமாக அமைந்ததாகவும் குறிப்பிடுகிறார்..

எடுத்தோம் கவிழ்த்தோம்

அதேநேரம் அவர் எடுத்தோம் கவிழ்த்தோம் என இந்தியாவுக்குத் திரும்ப விரும்பவில்லையாம். இன்னும் சுமார் 10 ஆண்டுகள் அங்கேயே இருந்து போதிய செல்வம் சேர்க்க விரும்புகிறார். பிறகு 40 வயதாகும்போது, இந்தியாவுக்குத் திரும்ப விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

துபாயில் இவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அங்கு அவருக்குத் திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. டேராடூனில் சொந்தமாக ஒரு வீடு வைத்திருக்கும் இவர், தன் மொத்தச் சொத்துகளையும் சேமிப்புகளையும் சேர்த்து சுமார் ₹50 லட்சம் முதல் ₹60 லட்சம் வரை இருக்கும் என மதிப்பிட்டுள்ளார்.

சொந்தமாகத் தொழில்

துபாயில் அதிகரித்து வரும் ஆட்குறைப்புக் கவலைகளுக்கு மத்தியில், தனது தற்போதைய வேலையை ராஜினாமா செய்துவிட்டு டேராடூனுக்குத் திரும்ப விரும்புவதாகக் கூறியுள்ளார். இதன் மூலம் வருவாய் குறையும் என்றாலும் குடும்பத்துடன் நெருங்கி வாழவும் பிரஷர் இல்லாமல் இருக்கவும் முடியும் என அவர் கூறியுள்ளார். மேலும், இது திடீர் முடிவு அல்லாமல், கடந்த சில மாதங்களாகப் படிப்படியாக யோசித்து எடுத்த முடிவு என்றும் அவர் விளக்கினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+