"ஓபிஎஸ் அரசியல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது" ஆறுமுகசாமி விசாரணை அறிக்கை பற்றி செங்கோட்டையன்!
ஈரோடு: ஓபிஎஸ் செய்த அரசியல் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழையினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அதிமுக- சார்பில் வெள்ளை நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏ-வுமான செங்கோட்டையன் கலந்துகொண்டார் மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

செங்கோட்டையன் பேட்டி
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து செங்கோட்டையன் கூறுகையில், அதிமுக ஆட்சியில் இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்கள் பணிகளை செய்து கொண்டிருக்கிறது. குறிப்பாக அந்தியூர் பகுதியில் வெள்ளம் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன்.

அத்திக்கடவு - அவினாசி திட்டம்
அந்தியூர் பகுதியில் தமிழக அமைச்சர்கள் பார்வையிட்டு உள்ளனர். அதனால் உடனடியாக நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும். அத்திக்கடவு - அவினாசி திட்டப் பணிகளை வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டு இருக்கிறார். உடனடியாக அதனை நிறைவேற்றும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

வேண்டுகோள்
தற்போது வெள்ளம் இரண்டரை லட்சம் கன அடி தண்ணீர் வெளியேறிக் வீணாகிக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் திட்டம் முடிந்திருந்தால், வறட்சி பகுதிகளை நல்ல வளமான பகுதிகளாக மாற்றி இருக்க முடியும். இன்னும் ஒரு மாத காலத்திற்குள் இப்பணிகளை முடித்து வறட்சிப் பகுதிகளுக்கு இந்த தண்ணீரை வீணாக கடலில் கலக்காமல் கொண்டு செல்ல வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.

ஓபிஎஸ் பற்றி கருத்து
தொடர்ந்து ஓபிஎஸ் விடுத்த சவால் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, எங்களைப் பொறுத்தவரை ஓபிஎஸ் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும் எங்கிருந்து பேசுகிறார், எதற்காக பேசுகிறார் என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவரது ஒவ்வொரு நடவடிக்கைகளையும் கூர்ந்து கவனிக்கும் போது, ஓபிஎஸ் எப்படி அரசியல் செய்தார் என்பதை நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கையில் வெளிச்சத்தில் வந்துள்ளது என்று தெரிவித்தார்.
-
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்! -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications