இப்படியொரு வரவேற்பா? குஷியில் திக்குமுக்காடிய பிரேமலதா விஜயகாந்த்! மாஜி எம்.எல்.ஏ.வுக்கு ஷாக்!
ஈரோடு: தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்துக்கு ஈரோட்டில் கிடைத்த உற்சாக வரவேற்பு அவரை திக்குமுக்காட வைத்துவிட்டதாம்.
தேமுதிக பொருளாளராக இருந்து திமுகவுக்கு தாவிய மாஜி எம்.எல்.ஏ. சந்திரக்குமாரின் சொந்த ஊரான ஈரோட்டில், இப்படியொரு வரவேற்பு தனக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லையாம்.
இதனிடையே வெளியூர் உட்பட எந்த நிகழ்ச்சிகளுக்கு சென்றாலும் தனது சிவப்பு நிற போர்டு எண்டேவர் காரில் தான் பிரேமலதா பயணிப்பார். ஆனால் நேற்று ஈரோடு சென்ற அவர் வெள்ளை நிற பார்ச்சூனர் காரில் பயணித்தது குறிப்பிடத்தக்கது.

நூல் விலை
பருத்தி மற்றும் நூல் விலை உயர்வை கண்டித்து தேமுதிக சார்பில் ஈரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக சென்ற தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்தை கோவை விமான நிலையத்தில் இருந்தே நிர்வாகிகள் கார்களில் அணிவகுத்து அழைத்துச் சென்றனர். சென்னை உட்பட வெளியூர்களில் எந்த நிகழ்ச்சிகளுக்கு சென்றாலும் செண்டிமெண்டாக தனது சிவப்பு நிற போர்டு எண்டேவர் காரில் தான் பிரேமலதா பயணிப்பார்.

ஃபோர்டு கார்
அண்மைக்காலமாக இப்போது அந்தக் காரை அவரது மகன் விஜய பிரபாகரன் கட்சி நிகழ்ச்சிகளுக்கு செல்ல பயன்படுத்தி வருகிறார். அப்படி என்ன செண்டிமெண்ட் அந்தக் காரில் இருக்கிறது எனத் தெரியவில்லை. இதனிடையே நேற்று வெள்ளை நிற பார்ச்சூனர் காரில் மாறி பயணித்தார் பிரேமலதா. இதனிடையே சந்திரக்குமார் திமுகவுக்கு தாவியதற்கு பிறகு ஈரோடுக்கு செல்வதை பிரேமலதா விஜயகாந்த் பெரும்பாலும் குறைத்திருந்தார்.

சந்திரக்குமார் ஊர்
காரணம் தேமுதிக பொருளாளராக இருந்து திமுகவில் இணைந்த போது தன்னுடன் பெரும்பாலான நிர்வாகிகளை சந்திரக்குமார் அழைத்துச் சென்றதேயாகும். இந்தச் சூழலில் பருத்தி மற்றும் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி தேமுதிக சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்துக்கு தலைமையேற்கச் சென்ற பிரேமலதா விஜயகாந்துக்கு ஈரோட்டில் மிக உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. அவரது காரின் முகப்பு கண்ணாடியில் மலர்களை தூவி சில கிலோமீட்டர் அழைத்துச் செல்லப்பட்டார்.

ஜப்பான் கதை
இந்தக் காட்சிகளையெல்லாம் கண்ட பிரேமலதா விஜயகாந்த் மகிழ்ச்சியில் திகைத்துப் போனார். அதே உற்சாகத்துடன் மேடையேறிய அவர், ஜப்பான் நாட்டு கதையெல்லாம் கூறி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். இதனிடையே மாதம்தோறும் இனி சுற்றுப்பயணம் செய்வது பற்றியும் அவர் ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
-
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
“தேமுதிக கண்டிப்பாக விட்டுக்கொடுக்கும்” பிரேமலதா சொன்ன வார்த்தையால் திமுக தலைமை குஷி! -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
“ஒரு கார் வாங்குற தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?”.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications