வடமாநில தொழிலாளர்களுக்கு எதிர்ப்பு...சுமை தூக்கும் தொழிலாளர்கள் சாலை மறியல்..ஈரோட்டில் பரபரப்பு
ஈரோடு: தனியார் போக்குவரத்து பார்சல் நிறுவனத்தில் பல ஆண்டுகாலமாக பணியாற்றிய உள்ளூர் தொழிலாளர்களை சஸ்பெண்ட் செய்து விட்டு வடமாநில தொழிலாளர்களை பணியமர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோட்டில் ஆயிரக்கணக்கான சுமை தூக்கும் தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு அசோகபுரம் பவானி சாலையில் தனியார் போக்குவரத்து பார்சல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் ஜவுளி மஞ்சள் மற்றும் இன்ஜினியரிங் தோல் தொழில் மற்றும் பனியன் ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த பார்சல் வெளி ஊர்களுக்கும் மாநிலங்களுக்கும் வெளிநாட்டிற்கும் அனுப்பி வைக்கும் வகையில் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இதையொட்டி நிறுவனத்தில் ஈரோட்டில் சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள் 7000க்கும் மேற்பட்டோர்களை உள்ளடக்கிய தொழிற்சங்க தொழிலாளர்கள் பேச்சுவார்த்தை அடிப்படையில் நிறுவனத்தின் பணியினை அவர்களுக்குள்ளாகவே மேற்கொண்டு வந்தனர்.
இதற்கிடையே ஈரோட்டைச் சேர்ந்த தொழிற்சங்க தொழிலாளர்களது ஒப்புதல் ஏதுமின்றி இந்நிறுவனத்தைச் சேர்ந்தோர் வடமாநில தொழிலாளர்களை பணியில் வைத்துக் கொண்டு பார்சல் சர்வீஸ் நடத்தி வந்துள்ளனர் .
இதையடுத்து நிறுவனத்தின் செயல்பாட்டால் ஆத்திரமடைந்த ஈரோட்டில் சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள் 7000க்கும் மேற்பட்டோர் இந்நிறுவனத்தின் செயல்பாட்டை கண்டித்து ஈரோடு பவானி பிரதான சாலையின் முன்பு அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இனி அடுத்து இது குறித்து தகவல் அறிந்த கருங்கல்பாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட ஈரோட்டில் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
செய்தியாளர்களிடம் பேசிய தொழிலாளர்கள், ஈரோட்டை சேர்ந்த ஏ ஆர் எல் என்ற இந்த லாரி ஆபீஸ் நிறுவனத்தில் ஈரோட்டை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் தொழிற்சங்கங்களின் பேச்சு வார்த்தை அடிப்படையில் நிறுவனத்தில் பார்சல்களை லாரிகளில் ஏற்றி இறக்கும் பணியில் ஈடுபட்டு வந்ததாகவும், இதில் நடந்து முடிந்த தீபாவளி பண்டிகையொட்டி இந்நிறுவனத்தின் தங்களுக்கு வழங்க வேண்டிய போனஸ் தொகையை பேச்சுவார்த்தை அடிப்படையில் உயர்த்தி வழங்குவதாக உறுதி அளித்தனர்.
தீபாவளி முடிந்த நிலையில் தொழிற்சங்கங்களின் பேச்சுவார்த்தைக்கு உரிய பதில் கூறாமல் தங்கள் தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்களுக்கு வழங்கி வந்த பணிகளை தொழிற்சங்கங்களிடம் எந்தவித ஒப்புதலும் பெறாமல் இந்நிறுவனத்தின் தன்னிச்சையாக வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு பணி வழங்கியுள்ளதை கண்டித்து தற்பொழுது சாலை மறியலில் ஈடுபட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர் .
இதன் பின்னர் காவல்துறையினர் ஏ ஆர் எல் லாரி ஆபீஸ் நிறுவனத்திடம் இது குறித்து கேட்ட நிலையில் மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு கிடைக்கும் வரை எந்த பணியும் மேற்கொள்ளக் கூடாது என தெரிவித்தனர். மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்க தொழிலாளர்களிடமும் தனியார் லாரி ஆபீஸ் நிறுவனத்தினரிடமும் உரிய பேச்சுவார்த்தை நடத்திய காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஏழாயிரத்துக்கும் மேற்பட்டோர் லாரி ஆபீஸ் முன்பு குவிந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
மேலும், வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிய எதிர்ப்பு தெரிவித்து திடீரென பவானி சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போராட்டத்தின்போது, தொழிலாளி ஒருவர் மீது தனியார் நிறுவன அதிகாரியின் இருசக்கர வாகனம் மோதியதால் ஆத்திரமடைந்த 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், அந்த அதிகாரியை சரமாரியாக தாக்கினார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கருங்கல்பாளையம் போலீசார், தொழிலாளர்களை சமாதானப்படுத்தி அதிகாரியை மீட்டனர்.
தொடர்ந்து, போக்குவரத்து பார்சல் நிறுவன அதிகாரிகள், சுமை தூக்கும் தொழிலாளர்களின் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். சுமை தூக்கும் தொழிலாளர்கள் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
-
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்!












Click it and Unblock the Notifications