கீழ்பவானி கால்வாயிலும் கட்டுமானம் வீக்.. உடைந்து ஓடிய தண்ணீர்.. வெள்ளத்தில் மிதக்கும் 5 கிராமங்கள்
ஈரோடு: ஈரோடு அருகே மலைப்பாளையத்தில் கீழ்பவானி கால்வாய் உடைந்து 5 கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. கால்வாய் உடைந்து வெள்ளம் வெளியேறியதில் 100க்கும் மேற்பட்ட ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
கீழ்பவானி கால்வாயில் உடைப்பு ஏற்பட்டதால் பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. அவசரகதியில் தரமற்ற முறையில் கட்டுமான பணிகள் நடைபெற்றதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சென்னை புளியந்தோப்பு அடுக்குமாடி கட்டிடம் தரமற்றதாக கட்டப்பட்டதால், தொட்டாலே உதிரும் வகையில் அவை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக இந்த விவகாரம் கிளம்பியுள்ளது. இன்னொரு பக்கம், தரமற்ற கட்டிடம் கட்டியதற்காக பொறியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஒப்பந்ததாரர் தவறு செய்திருந்தால், அவரையும் பிளாக் லிஸ்டில் சேர்ப்போம் என்று தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்திருக்கிறார்.
சென்னையில் இப்படி ஒரு கட்டுமான விவகாரம் உலுக்கி வரும் நிலையில், ஈரோடு அருகே மலைப்பாளையத்தில் கீழ்பவானி கால்வாய் உடைந்து 5 கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. மலைப்பாளையம், கரையக்காடு, கண்ண வேலம்பாளையம், நெல்வயல், வரவங்காடு கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. கால்வாய் உடைந்து வெள்ளம் வெளியேறியதால் 100க்கும் மேற்பட்ட ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
கடந்த 6 மாதமாக, கரைகளை பலப்படுத்தும் பணிகள் நிறுத்தப்பட்டு தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால், விரிசல் ஏற்பட்டதால் தண்ணீர் கிராமங்களுக்குள் பாய்ந்துள்ளது. எனவே, கரைகள் முழுமையாக பலமாக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து விட்டு பிறகு தண்ணீரை திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications