• search
ஈரோடு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

காட்டு பகுதியில் சங்கீதா.. பின்னாடியே சென்று கட்டிப்பிடித்த மேனேஜர்.. அடுத்தடுத்து நடந்த ட்விஸ்ட்!

|

ஈரோடு: காட்டுப்பகுதிக்கு தனியாக வர சொன்ன மேனேஜருக்கு தகுந்த பாடத்தை சங்கீதா என்ற இளம் பெண் கற்பித்துள்ளார்.. ஆனாலும் சங்கீதாவுக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து சேர்ந்துள்ளது.

மதுரை திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் சங்கீதா.. இவர் தன்னுடைய தோழியுடன் திருப்பூர் பல்லடம் பகுதியில் உள்ள ஜே.ஜே.கார்மென்ட்ஸ் என்ற கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.. கம்ப்யூட்டர் பிரிவில் வேலை பார்க்கிறார்.

இந்த கம்பெனியின் மேனேஜர் சிவக்குமார்.. இவருக்கு சங்கீதா மீது ஒரு கண்.. அதனால் அடிக்கடி சங்கீதாவிற்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது... ஆனால் சங்கீதா அதற்கு இணங்கவில்லை.

 ஆபாசம்

ஆபாசம்

இந்நிலையில் சங்கீதாவின் போட்டோவை ஆபாசமாக சித்தரித்து, அவருடைய செல்போன் நம்பருக்கே அனுப்பி வைத்தார் சிவக்குமார்.. பிறகு, தான் சொல்லும் இடத்துக்கு வர வேண்டும், தனியாகத்தான் வரவேண்டும், என்று வாட்ஸ்அப்பில் ஒரு மிரட்டல் மெசேஜும் அனுப்பினார்.

 காட்டுப்பகுதி

காட்டுப்பகுதி

சிவக்குமார் வர தனியாக சொல்லிய இடம் பல்லடம் அருகே பச்சான்காட்டுபாளையம் பகுதியில் உள்ள ஒரு காட்டுப்பகுதி ஆகும்.. இந்த மெசேஜ் பார்த்து அதிர்ந்த சங்கீதா, தன்னுடைய தோழியுடன் சிவக்குமாரை சந்திக்க அந்த காட்டுப்பகுதிக்கு சென்றார். காட்டுப்பகுதியில் சங்கீதாவை பார்த்ததுமே சிவக்குமார் பாலியல் அத்துமீறலில் தடாலடியாக ஈடுபட முயன்றுள்ளார்.

 மிளகாய் பொடி

மிளகாய் பொடி

அதற்குள் சங்கீதாவும் அவரது தோழியும் பாதுகாப்பிற்காக கையோடு எடுத்து சென்ற பெப்பர் ஸ்பிரேயை எடுத்து சிவக்குமார் முகத்தில் அடித்தனர்.. அடுத்ததாக, மிளகாய் பொடியை எடுத்து அவர் மீது தூவினர்.. அடுத்ததாக, ஒரு பெரிய தடித்த கயிறு எடுத்து அவரை அங்கேயே கட்டிப்போட்டனர்.. காட்டுக்குள்ளேயே சிவக்குமாரை விட்டுவிட்டு, அங்கிருந்து நேராக கிளம்பி பல்லடம் ஸ்டேஷனுக்கு சென்று, சங்கீதா புகார் தந்தார்.. இந்த விஷயம் கேள்விப்பட்டு, சங்கீதா மீது சிவக்குமார் தரப்பிலும் புகார் தந்ததாக தெரிகிறது.

 வழக்கு பதிவு

வழக்கு பதிவு

இதையடுத்து, சங்கீதா மற்றும் அவரது தோழி மீது பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெயிலிலும் அடைத்தனர்.. அங்கு சிறைக்கு சென்றபிறகுதான் தெரிந்தது, சங்கீதாவின் தோழிக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.. அதனால் ரெண்டு பேரையும் தனிமைப்படுத்திக் கொள்ள நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

 புகார் மனு

புகார் மனு

இதனைத் தொடர்ந்து மதுரை கலெக்டர் ஆபீசுக்கு நேற்று சென்றார்.. பல்லடம் ஸ்டேஷனுக்கு கையெழுத்திட செல்லும்போது, மேனேஜர் சிவக்குமாரின் ஆதரவாளர்கள் தனக்கு மிரட்டல் விடுத்து தடுப்பதாகவும், தன் மீதான வழக்கு போலீசாராலேயே தொடரப்பட்ட வழக்கு என்பதால் அதனை திரும்ப பெறக்கோரியும் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

 சிவக்குமார்

சிவக்குமார்

இதையடுத்து, செய்தியாளர்களிடமும் சங்கீதா பேசினார்.. பல்லடம் போலீசார் சிவக்குமார் தரப்பிற்கு ஆதரவாக செயல்பட்டு எங்கள் மீது பொய் வழக்குபதிவு செய்து ஜெயிலில் அடைத்ததற்கு நியாயம் கிடைக்க வேண்டும்... போலீசார் மத ரீதியாக மிரட்டல் விடுத்து எப்ஐஆர் அறிக்கையில் கையெழுத்து பெற வைத்தனர் என்ற பகீர் குற்றச்சாட்டையும் முன்வைத்தார்.

 சேலை

சேலை

ஆனால் மேனேஜர் சிவக்குமாருக்கு இதே பழக்கமாம்.. தன் கார்மென்ட்ஸில் வேலை பார்க்கும் பெண்களில் தனக்கு யாரையாவது பிடித்து விட்டால் அவர்களை விட மாட்டாராம்.. அந்த பெண்ணின் செல்போன் நம்பரை வாங்கி வைத்து கொள்வாராம்.. அந்த பெண்களை சேலை அணிந்து கொள்ளும்படி வர சொல்லி, அவர்களை வாரத்துக்கு ஒருமுறை வெளியே அழைத்து சென்று பாலியல் அத்துமீறலிலும் ஈடுபடுவாராம்.

டார்ச்சர்

டார்ச்சர்

வாரத்துக்கு ஒரு பெண் என்று ஷிப்ட் வைத்து கொள்வாராம்.. தனக்கு ஒத்துழைக்கு பெண்கள் மறுத்தால், அவர்களை பலவகையில் டார்ச்சர் செய்வாராம்.. பல பெண்கள் குடும்ப வறுமைக்காகவே சிவகுமாருக்கு பணிந்து போய், மாட்டிக் கொண்டு தவித்து வருவதாகவும் சொல்கிறார்கள். இதையெல்லாம் தெரிந்துதான், வேறு எந்த பெண்களிமும் சிவக்குமார் இப்படி வேலை காட்டக்கூடாது என்று சங்கீதா முடிவு செய்து, அந்த காட்டுப்பகுதிக்கு சென்று, கட்டி வைத்து மிதித்துள்ளார்.. மேலும் இந்த சம்பவத்தின்போது எடுத்த வீடியோ ஒன்றையும் போலீசில் ஒப்படைத்தும் உள்ளார்.

 விசாரணை

விசாரணை

ஆனாலும் விஷயம் சிவக்குமாருக்கு ஆதரவாக திரும்பி விட்டது.. சங்கீதாவுக்கு வேலை கொடுக்கவில்லை என்ற ஆத்திரத்தில்தான் தன்னை காட்டுக்கு 2 பெண்களும் கடத்தி வந்து தாக்கியதாக சிவக்குமார் தரப்பில் சொல்லப்படுகிறது. "பாலியல் பிரச்சனை என்றால் போலீசுக்கு வர வேண்டியதுதானே, அது எப்படி காட்டுக்குள் கட்டி வைத்து அடிக்கலாம்" என்று பெண்களின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதாம்.. சிவக்குமாரையும் ஒப்புக்கு கைது செய்தாலும், சங்கீதா இந்த பிரச்சனையை விடுவதாக இல்லை!

 
 
 
English summary
Woman in trouble after beating a bank manager for teasing her
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X