37.19 சதவீத வாக்குப்பதிவு.. குளிரை பாராமல் ஓட்டளித்த மக்கள்.. இமாச்சல பிரதேசத்தில் விறுவிறு தேர்தல்
சிம்லா: இமாச்சல பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 37.19 சதவீத ஓட்டுக்கள் பதிவாகி இருந்தன. கடும் குளிர் நிலவும் நிலையில் அதனை பொருட்படுத்தாமல் பனி பிரதேசங்களை கடந்து பொதுமக்கள் வாக்களித்து வருகின்றனர்.
இமாச்சல பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடந்தது. முதல்வராக ஜெய்ராம் தாகூர் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் 5 ஆண்டு சட்டசபை காலம் விரைவில் முடிவுக்கு வர உள்ளது.
இதனால் மாநிலத்தில் உள்ள 68 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று விறுவிறுப்பாக தேர்தல் நடைபெற்று வருகிறது.

குளிரை பொருட்படுத்தாமல் ஆர்வம்
இமாச்சல பிரதேசத்தில் தற்போது கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் ஓட்டுப்பதிவு காலை 8 மணிக்கு துவங்கி நடைபெற்று வருகிறது. காலை முதலே வாக்காளர்கள் ஆர்வமாக வந்து நீண்ட வரிசையில் நின்று ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். பல இடங்கள் பனி படர்ந்துள்ளன. இருப்பினும் வாக்குச்சாவடி அலுவலர்கள் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரத்துடன் சென்று தேர்தல் பணியில் ஆர்வமாக ஈடுபட்டனர். இதனால் வாக்காளர்களும் குளிரை பொருட்படுத்தாமல் வீட்டை விட்டு வெளியே வந்து பனி படர்ந்த பாதைகளை கடந்து தேர்தலில் வாக்களித்து வருகின்றனர்.

ஓட்டுப்போட்ட தலைவர்கள்
மேலும் தற்போதைய முதல்வர் ஜெய்ராம் தாகூர் மாண்டியில் ஓட்டளித்தார். பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா பிலாஸ்பூர் பகுதியிலும், மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் ஹர்மீர்புரில் உள்ள வாக்குச்சாவடியிலும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் எம்பியுமான ஆனந்த் சர்மா சிம்லாவிலும் ஓட்டளித்தனர். இந்த தேர்தலில் மொத்தம் 55 லட்சத்து 74 ஆயிரத்து 793 பேர் ஓட்டளிக்க உள்ளனர். இவர்களுக்காக 7,881 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடியை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

37.19 சதவீத ஓட்டுப்பதிவு
காலையில் இருந்து அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்று வருகிறது. எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை. சில பூத்களில் மட்டும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கோளாறாகின. இருப்பினும் உடனடியாக கோளாறு சரிசெய்யப்பட்டு மீண்டும் ஓட்டுப்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தான் மதியம் 1 மணி நிலவரப்படி மாநிலத்தில் மொத்தம் 37.19 சதவீத ஓட்டுக்கள் பதிவாகி இருந்தன. மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. அதன்பிறகு மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்படும்.

யாருக்கு வெற்றி?
இந்த தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் டிசம்பர் 8 ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அன்றைய தினம் குஜராத் சட்டசபை தேர்தல் முடிவும், இமாச்சல பிரதேச தேர்தல் முடிவும் ஒன்றாக வெளியாக உள்ளது. இமாச்சல பிரதேசத்தை பொறுத்தமட்டில் மும்முனை போட்டி நிலவுகிறது. ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. டெல்லி, பஞ்சாப் தேர்தலில் வெற்றி பெற்ற உற்சாகத்தில் ஆம்ஆத்மியும் இங்கு களம் இறங்கி உள்ளதால் மும்முனை போட்டியாக உள்ளது. இருப்பினும் நேரிடை போட்டி என்பது பாஜக-காங்கிரஸ் இடையே தான் இருக்கிறது. பாஜக, காங்கிரஸ், ஆம்ஆத்மி கட்சிகள் மாநிலத்தில் உள்ள 68 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. களத்தில் 412 வேட்பாளர்கள் உள்ளனர். இதில் வெற்றி பெறும் 68 வேட்பாளர்கள் யார் என்பதை அறிய நாம் டிசம்பர் 8 ம் தேதி வரை காத்திருக்க வேண்டியது அவசியமாகும்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications