For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

லாக்டவுன் கஷ்டம்தான்.. வீட்டில் எப்படிப் பொழுதைக் கழிப்பது.. இதோ சில ஐடியாக்கள்!

Google Oneindia Tamil News

சென்னை: உண்மையிலேயே இது பெரிய சவால்தான்.. இதுதான் மிகப் பெரிய சவால். காரணம் 21 நாள் லாக் டவுன் என்பது கண்டிப்பாக கஷ்டமானதுதான்.

Recommended Video

    சாதாரண சளியும் கொரோனாவும் ஒன்றா ?? | Importance of social distancing | Dr Aravindha Raj

    நிறையப் பேருக்கு புதிதாக ஒர்க் பிரம் ஹோம் செய்வதால் வீட்டுச் சூழல் குழப்பத்தைக் கொடுக்கலாம். வீட்டில் நிலவும் சத்தம் உள்ளிட்டவை டிஸ்டர்ப் ஆக இருக்கலாம்.

    அவர்கள்தான் முதலில் தங்களது புதிய சூழலுக்கு தங்களது மனதை பக்குவப்படுத்த வேண்டும். அதே சமயம், வேலையில்லாமல் வீட்டில் முடங்குவோர் வீட்டில் பொழுதைக் கழிக்க சிரமப்படுவார்கள்.

     வீட்டை சுத்தப்படுத்தலாம்

    வீட்டை சுத்தப்படுத்தலாம்

    அவர்கள் வீட்டை சுத்தப்படுத்தும் வேலையில் ஈடுபடலாம். குவிந்து கிடக்கும் புத்தகங்களை அடுக்கி லைப்ரரி ரெடி செய்யலாம். துணி துவைக்கலாம்.. சமைக்கலாம் அல்லது சமையல் செய்ய கற்றுக்கலாம்.. இப்படி நிறையச் செய்யலாம். உங்க வீட்டில் இருக்கும் குட்டீஸ்களுக்குப் பிடித்ததைச் செய்துக் கொடுங்கள். பேசாதப் பேச்சுகளையெல்லாம் உங்கள் குடும்பத்தாரோடுப் பேசி மகிழுங்கள்.

     நிறைய கதை பேசலாம்

    நிறைய கதை பேசலாம்

    வீட்டில் பெரியவர்கள் இருந்தால் அவர்கள் அருகில் அமர்ந்து உரையாடுங்கள். மனைவிக்கு உதவி செய்யுங்கள். வேலைகளைப் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.
    உங்கள் பிள்ளைகளோடு விளையாடு்ங்கள். அவர்களுக்கு நம்முடையப் பாரம்பரிய பழக்கவழக்கங்களைக் கற்றுக் கொடுங்கள். சல்லிக்கோடு கோலிக்குண்டு கில்லி அடித்தல் பட்டம் விடுதல் போன்ற விளையாட்டுகளைக் கற்றுக் கொடுங்கள் உங்களுக்கு கிராப்ட் வொர்க் தெரியுமா.

     விளையாட கத்துக்கங்க

    விளையாட கத்துக்கங்க

    அப்படியென்றால் விதவிதமானப் பொருட்கள் செய்யக் குழந்தைகளுக்குக் கற்றுத் தாருங்கள். உங்கள் குழந்தைகளோடுச் சேர்ந்து ஓவியம் வரையுங்கள்.
    உங்கள் பிள்ளைகளுடன் சேர்ந்து நிலாச்சோறு சாப்பிடுங்கள். உங்கள் பிள்ளைகளோடு ஓடியாடி விளையாடுங்கள். ராமாயணம் மஹாபாரதம் போன்றப் புராணக் கதைகளைக் குழந்தைகளுக்குக் கூறுங்கள்.உங்கள் குழந்தைகளுக்குப் பிடித்த உணவு வகைகளைச் சமைத்து அன்புடன் பரிமாறுங்கள். உங்கள் வீட்டைத் தூய்மைப்படுத்துங்கள். துணிகளை எல்லாம் அழகாக அடுக்கி வையுங்கள்.

     நம் நலனுக்காகவே

    நம் நலனுக்காகவே

    இந்த 21 நாட்கள் வீட்டில் இருப்பது என்பது எப்பொழுதும் வேலை வேலையென்று ஓடிக் கொண்டிருப்பவர்களுக்கு உங்கள் குடும்பத்தினரிடம் செலவிடக் கிடைத்திருக்கும் பொன்னான நாட்கள். யாராலும் செய்ய முடியாத ஓர் அற்புதமானச் செயலைக் கொரோனா செய்துள்ளது. என்னவென்றுக் கேட்கிறீர்களா . உறவுகளோடு உறவாடுவதற்கான நேரத்தை நமக்கு ஒதுக்கிக் கொடுத்துள்ளது. உங்கள் உறவுகளோடுப் பொழுதுபோக்க இது உங்களுக்குக் கிடைத்த அரிய வாய்ப்பாகும். அந்த வாய்ப்பினைச் சரியாகப் பயன்படுத்தி நாமும் மகிழ்ச்சி அடைவதோடு அனைவரையும் மகிழ்விப்போம்.. கொரோனாவையும் வெல்வோம்.

    English summary
    how to pass loc kdown period some tips
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X