சேகர் ரெட்டி மகளுக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளைக்கு திடீர் மாரடைப்பு.. உடல் நிலை கவலைக்கிடம்
ஹைதராபாத்: பிரபல தொழில் அதிபர் சேகர் ரெட்டியின் மகளுக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளைக்கு மாரடைப்பு ஏற்பட்டு கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பிரபல தொழில் அதிபர் மற்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழ்நாடு - புதுவை மாநில ஆலோசனைக்குழு தலைவர் சேகர் ரெட்டி.
இவரது மகளுக்கும் திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாக அதிகாரியாக இருக்கும் தர்மா ரெட்டியின் மகன் சந்திரமவுலி ரெட்டி (வயது 27) க்கும் அண்மையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

சந்திரமவுலி ரெட்டி
இவர்களது திருமணம் வரும் ஜனவரி மாதம் சென்னையில் நடைபெறுவதாக இருந்தது. ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி திருமணத்தை நடத்தி வைக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. திருமணம் நடக்க சில வாரங்களே இருந்ததால் இரு வீட்டாரும் திருமண அழைப்பிதழை உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு கொடுக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர். சந்திரவுமலி ரெட்டியும் தனது நண்பர்கள் உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழை கொடுத்து வந்து இருக்கிறார்.

சந்திரவுமவுலி ரெட்டிக்கு திடீர் மாரடைப்பு
இந்த நிலையில், சந்திரவுமவுலி ரெட்டிக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக ஆழ்வேர்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சந்திரவுமவுலி ரெட்டி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு இருப்பதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எக்மோ சிகிச்சை
இது தொடர்பாக காவேரி மருத்துவமனை தரப்பில் வெளியிடப்பட மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:- "கடந்த ஞாயிற்றுக்கிழமை மாரடைப்பு ஏற்பட்டு சந்திரமவுலி ரெட்டி காவேரி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு எக்மோ சிகிச்சை கொடுக்கப்பட்டு இதய தமனியில் ஸ்டண்ட் கருவி பொருத்தப்பட்டு இருக்கிறது.

உறவினர்களுக்காக பிரார்த்தனை செய்கிறோம்
அவரது உடல் உறுப்புகள் செயலிழந்து வருகின்றன. கவலைக்கிடமான நிலையில், சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நிலையை மருத்துவர்கள் குழு தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகிறது. இக்கட்டான இந்த தருணத்தில் அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்காக பிரார்த்தனை செய்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமணம் நடைபெறுவதற்கு இன்னும் சில வாரங்களே எஞ்சியிருந்த நிலையில், மாப்பிள்ளை சந்திரமவுலி ரெட்டிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவது இரு வீட்டினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications