Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நடிகை ரோஜா வயிற்றில் "புளியை" கரைக்கும் சந்திரபாபு நாயுடு.. ஜெகன் போட்ட ஆர்டர்.. அனலடிக்கும் ஆந்திரா

நடிகை ரோஜா மீது சந்திரபாபு நாயுடு விமர்சனங்களை முன்வைத்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ரோஜா நகரி தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கி உள்ள நிலையில், சந்திரபாபு நாயுடுவும் மக்களை நேரில் சந்தித்து ஆதரவு கோரி வருகிறார்.

ஆந்திர சட்டசபைக்கு விரைவில் தேர்தல் வர உள்ளது.. ஆளுங்கட்சியாக உள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி மறுபடியும் ஆட்சியை பிடிக்க மும்முரமாகி உள்ளது.

இதற்காக, பொதுமக்களிடம் ஆதரவு திரட்டுவதற்காக தன்னுடைய எம்எல்ஏக்களை இப்போதே முடுக்கிவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 நடிகை ரோஜா

நடிகை ரோஜா

குறிப்பாக, ஒவ்வொரு எம்எல்ஏக்களும், தங்களுடைய தொகுதியில் ஒவ்வொரு வீடாக சென்று மக்களிடம் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்ய வேண்டும் என்றம், அரசு சார்பில் வழங்கப்படும் அனைத்து நலத்திட்டங்களும் பொது மக்களுக்கு சரியாக கிடைக்கிறதா என கேட்டு குறைகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு பிறப்பித்துள்ளார்... இதையடுத்து, முதல் நபராக ரோஜா, தன்னுடைய நகரி தொகுதியில் களமிறங்கிவிட்டார்..

 ரோஜா - நகரி

ரோஜா - நகரி

தொகுதியில் ஏற்கனவே நன்மதிப்பை பெற்ற ரோஜா, நேற்றைய தினமும் தொகுதிக்குள் நுழைந்ததால், பொதுமக்கள் அமைச்சர் ரோஜாவுக்கு மாலை அணிவித்து, உற்சாக வரவேற்பு அளித்தனர்... நகரியில் வீடு வீடாக சென்ற ரோஜா, மக்களை சந்தித்து, அரசு சார்பில் வழங்கப்படும் முதியோர் பென்ஷன், விதவை பென்ஷன் போன்றவை எல்லாம் சரியாக கிடைக்கிறதா? ரேசன் பொருட்கள் சரியான அளவில் வீடு தேடி வருகிறதா? என்று கேட்டறிந்தார்.. பிறகு, விரைவில், வீட்டு மனை, பட்டா இல்லாதவர்களுக்கு வீட்டு மனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரோஜா உறுதியளித்தார்.

 பரபரப்பு

பரபரப்பு

அதேபோல, எதிர்க்கட்சியாக உள்ள தெலுங்கு தேசம் கட்சியும், இந்த முறையாவது ஆட்சியை பிடித்தே ஆக வேண்டும் என்று மாநிலம் முழுவதும் பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறது.. ஆளும் கட்சி மீது ஏராளமான குற்றச்சாட்டுகளையும் விமர்சனங்களையும் அள்ளி வீசி வருகிறது.. இதனால், கடுமையான அரசியல் பரபரப்பு போட்டிகள் ஆந்திராவில் ஏற்பட்டுள்ளன. சமீபத்தில் சந்திரபாபு நாயுடு நகரி தொகுதியில் உள்ள புத்தூரில் பிரம்மாண்ட பொதுக் கூட்டம் நடத்தினார்...

 சந்திரபாபு நாயுடு

சந்திரபாபு நாயுடு

இதில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்... அப்போது சந்திரபாபு நாயுடு அமைச்சர் ரோஜா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார்.. கடந்த 2019 தேர்தல் தோல்விக்குப் பிறகு, எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சிக்கு மக்களிடையே ஆதரவு பெருகி வருகிறது... மதனப்பள்ளி சித்தூர் ஆகிய இடங்களில் நடந்த பொதுக்கூட்டத்தில் சுமார் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்ப்பை காட்டிலும், 2 லட்சம் பேருக்கு மேல் கலந்து கொண்டது ஆச்சரியமாக பார்க்கப்பட்டது.

 சந்திரபாபு நாயுடு

சந்திரபாபு நாயுடு

தெலுங்கு தேசம் கட்சியின் பொதுக்கூட்டங்களில் ஏராளமானோர் திரண்டு வருவது, ஆளும் கட்சிக்கு புளியை கரைத்துள்ளது.. அதிலும், சுற்றுலாத்துறை அமைச்சரான ரோஜாவின் தொகுதிக்கே சென்று சந்திரபாபு நாயுடு பிரச்சாரம் மேற்கொண்டதும், ரோஜாவை சரமாரியாக குற்றஞ்சாட்டி பேசியதும், ஆளும் கட்சிக்கு மேலும் கலக்கத்தை தந்து வருகிறது.. மேலும், துணை முதல்வர் நாராயணசாமியின் சொந்த ஊரான கார்வேட்டி நகரத்தில் இருந்து அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர், தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்த சம்பவம் அதற்கு மேல் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஜெர்க்

ஜெர்க்

"நகரியை திருப்பதி மாவட்டத்துடன் இணைக்காததால், ரோஜாவின் தொகுதி மக்கள் ஆவேசத்தில் இருக்கிறார்கள்.. ஆந்திராவில் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பின்மை மற்றும் விலைவாசி உயர்வு ஆகியவற்றால் பொதுமக்கள் கொந்தளிப்பில் உள்ளனர்... இதனால் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி மாபெரும் வெற்றி பெறும்" என்று சந்திர பாபு நாயுடு புத்தூரில் நடந்த கூட்டத்தில் பேசியது, ஆளும் கட்சிக்கு ஜெர்க்கை தந்துவிட்டது.. ஆந்திர சட்டசபைக்கு தேர்தல் வர இன்னும் 2 வருடங்கள் இருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் இப்போதே மக்களை சந்தித்து ஆதரவு கேட்பதும், பொதுக்கூட்டங்களை நடத்தி வருவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+