For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குஜராத்தில் 1.86 லட்சம் பேர் கைது

By Mayura Akilan
Google Oneindia Tamil News

அகமதாபாத்: குஜராத்தில் வரும் 30 ம் தேதி மக்களவை தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த நிலையில் அங்கு அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக 1.86 லட்சம் பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

குஜராத்தில் 26 மக்களவை தொகுதிகளுக்கு வரும் 30 ம் தேதி தேர்தல் நடக்கிறது. அங்கு இதுவரை 1.86 லட்சம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில், 19 ஆயிரம் பேர் ஆபத்தானவர்கள் மற்றும் கிரிமினல் பின்னணி உடையவர்கள் என்று அறிக்கை கூறுகிறது.

இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இன்று குஜராத்தில் 4 இடங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.

பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காகவும், குஜராத்தில் சுதந்திரமான நேர்மையான தேர்தலை நடத்தும் நோக்கிலும் மாநில தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மாநிலம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

English summary
The State Election Commission has made 1,86,460 preventive arrests so far under CrPC to instill a sense of safety among voters and organise free and fair polls in Gujarat.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X