ஆந்திரா: கிருஷ்ணா நதியில் படகு கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 18 ஆக அதிகரிப்பு
ஆந்திராவில் கிருஷ்ணா நதியில் படகு கவிழ்ந்த விபத்தில் 18 பேர் பலியாகி உள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
இப்ராஹிம்பட்டினம்: ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. மேலும் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
கிருஷ்ணா மாவட்டத்தின் இப்ரஹீம்பட்டினத்தில் இருந்து கிருஷ்ணா நதியின் நடுவே உள்ள பவானி தீவுக்கு படகில் சுற்றுலா சென்றுள்ளனர். பவானி தீவில் இருந்து திரும்பும் போது படகு கிருஷ்ணா நதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

படகில் பயணித்த 38 பேரில் 18 பேர் பலியாகி உள்ளனர். 18 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். எஞ்சிய 2 பேரை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்கள் அனைவரும் ஓங்கோலைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக கிருஷ்ணா மாவட்ட ஆட்சியரை முதல்வர் சந்திரபாபு நாயுடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார்.












Click it and Unblock the Notifications