For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தெற்கு சூடானில் தத்தளித்த 154 இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பினர்

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: தெற்கு சூடான் நாட்டில் உள்நாட்டுப்போரில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க அந்நாட்டுக்கு சென்ற C-17 ரக சிறப்பு விமானம், இன்று அதிகாலை 156 பேருடன் திருவனந்தபுரம் வந்து சேர்ந்தது.

சூடானில் இருந்து பிரிந்த தெற்கு சூடானில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அந்நாட்டின் அதிபர் சல்வா கீர் மற்றும் துணை அதிபர் ரியக் மாசர் ஆகிய இருவருக்கும் இடையே அதிகாரப்போட்டி நிலவி வருகிறது. இதனால் இரு தரப்பினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. தெற்கு சூடானில் நடந்து வரும் உள்நாட்டுப் போரில் சுமார் 600 இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அவர்களை பத்திரமாக இந்தியா கொண்டு வர வெளியுறவுத்துறை அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டது.

154 Indians evacuated from South Sudan return home

அதன்படி தெற்கு சூடான் நாட்டுக்கு இரண்டு C-17 ரக சிறப்பு விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்டது. அதில் முதல் விமானம், 156 பேருடன் இன்று அதிகாலை திருவனந்தபுரம் வந்து சேர்ந்தது. பெண்கள் 9 பேர் , குழந்தைகள் 3 பேர் மற்றும் நேபாள நாட்டைச் சேர்ந்த 2 பேர் என மொத்தம் 156 பேர் இந்தியா வந்து சேர்ந்தனர். விமானம் டெல்லி செல்வதற்கு முன்பாக தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த பயணிகள் திருவனந்தபுரத்தில் இறங்கினர்.

தெற்கு சூடானில் இருந்து இந்தியர்களை பத்திரமாக மீட்டு வந்த வந்த மத்திய உள்துறை இணை அமைச்சர் விகே சிங், விமான நலையத்தில் வைத்து செய்தியாளர்களிடம் கூறியதாவது: தற்போது 156 பேர் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். ஏற்கனவே 30-40 பேர் அவர்களாகவே விமானம் மூலமாக இந்தியா வந்து சேர்ந்து விட்டனர். சுமார் 300 பேர் தங்களது தொழில் மற்றும் மற்ற காரணங்கால் எங்களுடன் வர மறுத்து விட்டனர்.

அவர்களை சமரசம் செய்து அழைத்துவர முயற்சித்தோம். ஆனால், உயிரைவிட தொழிலே முக்கியம் என அவர்கள் கருதுவதாக தெரிகிறது. அபாயத்தில் உள்ள இந்தியர்களை மீட்பதே எங்களது முக்கிய நோக்கமாக இருந்தது. எங்களுக்கு கிடைத்த தகவலின் படி சுமார் 550-க்கும் மேற்போட்டோர் ஜுபாவிலும், 150 இந்தியர்கள் அங்குள்ள எண்ணெய் கிணறு உள்ள பகுதிகளில் உள்ளதாகவுகவும் தெரியவந்தது என்று கூறினார்.

தெற்கு சூடானில் இருந்து சி-17 விமானம் இந்தியா வரும் போது, உள்துறை இணை அமைச்சர் விகே சிங் உகாண்டா நாட்டு பிரதமர் ருஹாகுனா ருகுன்டாவை சந்தித்துள்ளார். உகாண்டா தரப்பில் இருந்து அனைத்து உதவிகளும் செய்யப்படும் என ருஹாகனா ருகுன்டா தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

English summary
The first Indian Air Force flight C-17 carrying 156 people, who were evacuated from war-torn South Sudan's capital city Juba, arrived here early on Friday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X