பெரிய கொடுமை.. 18 வயது பெண்ணை பலாத்காரம் செய்து.. காட்சியை "லைவாக" ஒளிபரப்பிய நபர்
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் போபாலில் 18 வயது பெண்ணை பலாத்காரம் செய்து அதை நேரலையாக நண்பனுக்கும் அனுப்பிய விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் குவாலியரை சேர்ந்தவர்கள் விவேக் யாதவ் (25) மற்றும் லாலு சாஹு (25). இவர்கள் இருவரும் 18 வயது பெண்ணுடன் நட்பாக பழகி வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அந்த பெண்ணை இருவரும் தனியாக ஒரு இடத்திற்கு வர சொல்லியுள்ளனர். அப்போது தங்களுடயை ஆசைக்கு இணங்குமாறு தெரிவித்துள்ளனர்.

பெண்
இதையடுத்து அந்த பெண் மறுக்கவே அந்த பெண்ணிடம் அவரது தந்தையையும் சகோதரனையும் கொன்றுவிடுவோம் என மிரட்டியுள்ளனர். இந்த நிலையில் அந்த பெண்ணை லாலு ஹோட்டல் அறைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அந்த பெண்ணை லாலு பலாத்காரம் செய்துள்ளார்.

பலாத்காரம்
அப்போது பலாத்காரத்தை லைவ் வீடியோவாக தனது நண்பர் விவேக்கிற்கும் அனுப்பியுள்ளார். விவேக் லைவில் பலாத்காரத்தை பார்க்கும் போது ஸ்கிரீன்ஷாட்டுகளை எடுத்து வைத்துள்ளது தெரியவந்தது. இந்த வீடியோவை வைத்து அந்த பெண்ணை மிரட்டி இருவரும் பல முறை பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

பெண்ணுக்கு நிச்சயதார்த்தம்
பின்னர் அந்த பெண்ணுக்கு அவரது வீட்டில் வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது. இதை அறிந்த லாலுவும் விவேக்கும் அந்த பெண்ணை மிரட்டியுள்ளனர். மேலும் அந்த பெண்ணை பலாத்காரம் செய்த வீடியோவை அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளவிருந்த நபருக்கு அனுப்பியுள்ளனர்.

அதிர்ச்சி
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள மறுத்துள்ளார். பின்னர்தான் அந்த பெண், இருவரால் தனக்கு நேர்ந்த கொடுமைகளை தாய், தந்தையரிடம் கூறி அழுதுள்ளார். பின்னர் அவர்கள் போலீஸில் புகார் அளித்ததை அடுத்து அந்த இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தலைமறைவாக உள்ள லாலு, விவேக்கை தேடி வருகிறார்கள்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications