For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

72 ஆண்டுகளில் 14 பிரதமர்களை சந்தித்த இந்தியா... செங்கோட்டைக்கே செல்லாத இரு பிரதமர்கள்

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    பிரதமர்கள் உரையாற்றும் ஷாஜகானின் செங்கோட்டை-வீடியோ

    டெல்லி: இந்தியா 14 பிரதமர்களை சந்தித்துள்ள நிலையில் அவர்களுள் இரு பிரதமர்கள் செங்கோட்டையில் கொடி ஏற்றவில்லை.

    இந்தியா கடந்த 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திரம் பெற்றது. இதற்காக ஏராளமான தங்கள் இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர்.

    இந்தியா விடுதலை பெற்ற நாள் முதல் இந்த 72 ஆண்டுகளில் 14 பிரதமர்கள் ஆட்சி செய்துவிட்டனர். அவர்களுள் பின்வருவோர் பிரதமராக இருந்துள்ளனர்.

    2 Prime Ministers didnt get chance to hoist the flag

    1. ஜவஹர்லால் நேரு
    குல்சாரி லால் நந்தா (பொறுப்பு)
    2. லால் பகதூர் சாஸ்திரி
    3. இந்திரா காந்தி
    4. மொர்ஜி தேசாய்
    5. சரண் சிங்
    6.ராஜீவ் காந்தி
    7. வி.பி. சிங்
    8. சந்திரசேகர்
    9. பி.வி. நரசிம்மராவ்
    10. அடல்பிகாரி வாஜ்பாய்
    11. தேவெகௌடா
    12. ஐ.கே. குஜ்ரால்
    13. மன்மோகன் சிங்
    14. நரேந்திர மோடி

    இவர்களுள் அதிக முறை செங்கோட்டையில் கொடியேற்றியவர் நேரு ஆவார். இவர் 17 முறை கொடியேற்றியுள்ளார். 16 முறை கொடியேற்றி இரண்டாவது இடத்தில் இந்திரா காந்தி உள்ளார்.

    சரண் சிங், வி.பி. சிங், தேவெகௌடா, ஐ.கே. குஜ்ரால் ஆகியோர் மிகவும் குறைந்த பட்சமாக ஒரு முறை மட்டுமே கொடியேற்றியுள்ளனர். இந்த 14 பேரில் குல்சாரிலால் நந்தா மற்றும் சந்திர சேகர் ஆகியோர் ஒரு முறை கூட கொடியேற்றியது இல்லை.

    இவர்களில் குல்சாரிலால் கடந்த 1964-ஆம் ஆண்டு மே 27-ஆம் தேதி முதல் ஜூன் 9-ஆம் தேதி வரை 13 நாட்களுக்கு மட்டுமே (பொறுப்பு) பிரதமராக இருந்தார். அதுபோல் சந்திரசேகர் கடந்த 1990-ஆம் ஆண்டு நவம்பர் 10-ஆம் தேதி முதல் 1991-ஆம் ஆண்டு ஜூன் 21-ஆம் தேதி வரை 223 நாட்கள் பிரதமராக இருந்தார்.

    குல்சாரிலால் நந்தா பொறுப்பு பிரதமர் பதவி மட்டுமே வகித்ததாலும் சந்திரசேகர் மிகக் குறுகிய காலம் மட்டுமே பிரதமராக இருந்ததாலும் அவர்கள் செங்கோட்டையில் கொடியேற்றும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

    இருவரும் மிகக் குறுகிய காலம் மட்டுமே பிரதமராக இருந்ததால் அவர்கள் செங்கோட்டையில் கொடியேற்றும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

    English summary
    2 Prime ministers didnt get chance to hoist the National Flag as their tenure was completed shortly.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X