For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒடிசாவை தாக்கிய ஃபனி.. பெரும்பாலான புயல்கள் கிழக்கு கடலோர பகுதிகளை கட்டம் கட்டுவது ஏன்?

Google Oneindia Tamil News

Recommended Video

    Cyclone Fani : ஃபானி புயல்.. 20 ஆண்டுகளில் இல்லாத பாதிப்பு இருக்கும்.. எச்சரிக்கை- வீடியோ

    பூரி: ஒடிசாவை அதிதீவிர ஃபனி புயல் தாக்கியுள்ள நிலையில் இதுவரை தாக்கிய 35 அதிதீவிர புயல்களில் 26 புயல்கள் வங்கக்கடலில் உருவானவையாகும்.

    இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக வலுப்பெற்று ஒடிசா நோக்கி நகர்ந்தது. ஃபனி என பெயரிடப்பட்ட இந்த புயல் இன்று காலை 8 மணிக்கு பிறகு ஒடிசா மாநிலம் கோபால்பூர் அருகே கரையை கடந்தது.

    இதன் காரணமாக ஒடிசா மாநிலத்தின் கடலோர பகுதிகளில் கடுமையான காற்று வீசி வருவதுடன் பலத்த மழையும் பெய்து வருகிறது. இதனால் கடலோர பகுதிகளில் வசிக்கும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

    கஜா, வர்தா புயல்களை விட மிக வலிமையானது ஃபனி... 200 கி.மீ. வேகத்தில் நொறுக்கியது கஜா, வர்தா புயல்களை விட மிக வலிமையானது ஃபனி... 200 கி.மீ. வேகத்தில் நொறுக்கியது

    ஃபனியின் தாக்கம்

    இந்த புயலின் தாக்கம் வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு மேற்குவங்கம் ஆகிய பகுதிகளிலும் இருந்து வருகிறது. முன்னதாக இந்த புயல் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா இடையே கரையை கடக்கும் என கூறப்பட்டது. இதனால் தமிழகத்தில் நல்ல மழை பெய்யும் தண்ணீர் பிரச்சனை தீரும் என எதிர்பார்க்கப்பட்டது.

    அதிதீவிர புயல்

    அதிதீவிர புயல்

    கடந்த ஆண்டு கஜா புயல் தமிழகத்தை தாக்கியதில் 20 பேர் பலியாகினர். இந்நிலையில் ஃபனி புயல் அதிதீவிர புயலாக தமிழகத்தையும் ஆந்திராவையும் தாக்கும் என வானிலை மைய அதிகாரிகள் கணித்திருந்தனர்.

    கிழக்கை குறிவைக்கும் புயல்கள்

    கிழக்கை குறிவைக்கும் புயல்கள்

    ஆனால் தமிழகத்தையும் ஆந்திராவையும் நெருங்கிய ஃபனி புயல் பின்னர் திசை மாறி ஒடிசாவுக்கு சென்றுவிட்டது. இந்திய பெருங்கடல் மற்றும் வங்கக்கடலில் உருவாகும் பெரும்பாலான புயல்கள் கிழக்கு கடலோர பகுதிகளை குறிவைத்து தாக்கி வருகின்றன.

    35 அதிதீவிர புயல்கள்

    35 அதிதீவிர புயல்கள்

    இதுவரை உருவான 35 அதிதீவிர புயல்களில் 26 புயல்கள் வங்கக்கடலில் தான் உருவாகியுள்ளன. இவற்றில் அதிக உயிரிழப்புகளை கொடுத்த நாடு பங்களாதேஷ் ஆகும்.

    98 புயல்கள்

    98 புயல்கள்

    உலக அளவில் புயலால் ஏற்படும் 40% உயிரிழப்புகளில் கால் பங்கு இந்தியாவினுடையதாகும். இந்தியாவை பொறுத்தவரை ஒடிசா மாநிலம் தான் அதிக புயலை சந்திதுள்ளது. கடந்த 1891 ஆம் ஆண்டு முதல் 2002ஆம் ஆண்டு வரை 98 புயல் மற்றும் சூறாவளிகள் ஒடிசாவை தாக்கியுள்ளன.

    உயிரிழப்புகள் அதிகரிப்பு

    உயிரிழப்புகள் அதிகரிப்பு

    ஆனால் அண்மைக் காலமாக ஆந்திர மாநிலமும் தமிழகமும் அதிக உயிரிழப்புகளை சந்தித்து வருகின்றன. அதிகளவிலான புயல்கள் வங்கக்கடலிலும் அரபிக்கடலிலுமே உருவாகின்றன. மேற்கு கடலோர பகுதியில் உருவாகும் புயல்கள் இந்திய கரைகளை தாக்குவதற்கு பதில் ஓமனையே தாக்கி வருகின்றன.

    கடந்த 4 மாதங்களில்

    கடந்த 4 மாதங்களில்

    ஏப்ரல் மற்றும் டிசம்பர் மாதங்களே புயல்கள் உருவாவதற்கான பருவ காலமாகும். ஆனால் இந்த ஆண்டு 65% புயல்கள் கடந்த 4 மாதங்களில் உருவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Severe Fani cyclone hits Odisha. As many as 26 of the 35 severe tropical cyclones in history have formed in Bay of Bengal. Many cyclones hits only east coast.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X