ம.பி.யில் மின்சாரம் பாய்ந்து 5 பேர் பலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் மின் மோட்டாரை சரி செய்து கொண்டிருந்தபோது மின்சாரம் பாய்ந்து 5 பேர் உயிரிழந்துவிட்டனர்.

குனா என்ற பகுதியில் ஒரு வீட்டில் பழுதான மின் மோட்டாரை 5 பேர் சரி பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் 5 பேர் மீதும் மின்சாரம் பாய்ந்தது.

இதில் அனைவரும் தூக்கிவீசப்பட்டனர். பின்னர் மருத்துவமனைக்கு அவர்களை அழைத்து செல்ல உறவினர்கள் முயன்றனர்..

ஆனால் அவர்கள் 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து குனா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
5 were died in Madhya Pradesh by getting electric shock when they were checking electric motor.
Please Wait while comments are loading...