83% மக்கள் பணமதிப்பிழப்பிற்கு ஆதரவாக உள்ளார்களாம்.. மோடி ஆப் சர்வே சொல்கிறது

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு, பொதுமக்களிடையே 81 சதவீதம் ஆதரவு உள்ளதாக பிரதமர் மோடி ஆப் மூலம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டு வரப்பட்டதன் ஓராண்டு நிறைவை முன்னிட்டு அதை எதிர்க்கட்சிகள் கறுப்பு தினம் என அனுசரித்து நேற்று முன்தினம், போராட்டங்களை நடத்தினர்.

81% people on PM Modi's app back demonetisation

அதேநேரம், இது கருப்பு பணத்திற்கு எதிரான தினம் என்று பாஜகவினரால் கொண்டாடப்பட்டது. மேலும், பிரதமர் மோடியின் ‛ஆப்'பில் பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

நேற்று முன்தினம் கருத்துக்கணிப்பு தொடங்கியது. 24 மணி நேரத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

இதில் சுமார் 81 சதவீதம் பேர் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஊழலை ஒழிக்க பணமதிப்பிழப்பு சரியான நடவடிக்கை என 93% மக்கள் தெரிவித்துள்ளனர்.

ஊழலை ஒழிக்க இது நீண்டகால பலனளிக்கும் என்று 92%, கறுப்பு பணத்தை பெருமளவு கண்டறிய இந்நடவடிக்கை உதவியதாக 90% கருத்து தெரிவித்துள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
More than 81 per cent of the participants in a survey on demonetisation on PM Modi's app have supported the government move.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற