திருப்பதியில் எடப்பாடிக்கு எதிராக சாமியாடிய பக்தர்.. திட்டி தீர்த்ததால் பரபரப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil
  திருப்பதியில் எடப்பாடிக்கு எதிராக சாமியாடிய பக்தர்

  ஆந்திரா: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக பக்தர் ஒருவர் சாமியாடி திட்டி தீர்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது குடும்பத்தினருடன் திருப்பதி எழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார்.

  நேற்றிரவு லஷ்மி நரசிம்மர் கோவிலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்றார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சாமி தரிசனம் செய்த போது திடீரென பக்தர் ஒருவர் ஆவேசமாக கத்தி சாமியாடினார்.

  ஆவேசமாக கத்திய பக்தர்

  ஆவேசமாக கத்திய பக்தர்

  அப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தை சீரழித்து விட்டதாகவும், தன்னை வந்து பார்க்குமாறும் ஆவேசமாக கத்தினார். இதனை சற்றும் எதிர்பாரத எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

  ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்தவர்

  ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்தவர்

  இதையடுத்து அந்த நபரை குண்டுக்கட்டாக காவல்துறையினர் தூக்கி சென்றனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த ஸ்ரீராமலு என தெரியவந்தது.

  முதல்வருக்கு எதிராக

  முதல்வருக்கு எதிராக

  ஸ்ரீராமலுவிடம் விசாரணை நடத்திய போலீசார் சில மணி நேரம் கழித்து விடுவித்தனர். திருப்பதியில் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக சாமியாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  திட்டி தீர்த்த சம்பவம்

  திட்டி தீர்த்த சம்பவம்

  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சாமியாக சித்தரித்து குறும்படங்கள் வெளியாகின இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியத. இந்நிலையில் முதல்வர் எடப்பாடிக்கு எதிராக சாமியாடி அவரை பக்தர் ஒருவர் திட்டி தீர்த்தது அங்கிருந்த பக்தர்களை அதிர்ச்சியடைய செய்தது.

  வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  A devotee scolded Tamil Nadu chief minister Edappadi Palanisami in Tripathi temple.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற