சசிகலாவைப் போல் சிறையில் ராஜ வாழ்க்கை வாழ்ந்து வரும் நடிகர் திலீப்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: பிரபல நடிகை கடத்தல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் திலீப்பிற்கு பல்வேறு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளி சசிகலா பெங்களூரு பரபரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கு அண்மையில் ஆய்வு செய்த அப்போதைய சிறைத்துறை டிஐஜி ரூபா, சசிகலாவுக்கு வழங்கப்பட்டிருக்கும் சிறப்பு சலுகைகளைப் பார்த்து பெரும் அதிர்ச்சியடைந்தார்.

சசிகலாவுக்கும் மட்டும் 5 தனியறைகள், சிறப்பு சமையலறை, செல்போன், ரோலிங் சேர், குக்கர் அதிகாரிகளின் கார்களில் நகர் வலம், அவ்வப்போது ஷாப்பிங் என சிறை வாழ்க்கையை அவர் கொண்டாடியது அம்பலமானது.

 லஞ்சம் கொடுத்த சசிகலா

லஞ்சம் கொடுத்த சசிகலா

டிஜிபி சத்திய நாராயண ராவுக்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்து சசிகலா இந்த ராஜபோக வாழ்க்கையை அனுபவித்து வருவதாக புகார் எழுந்ததால் இதுகுறித்து விசாரிக்க உயர் மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணையும் நடைபெற்று வருகிறது.

 ஆலுவா சிறையில் திலீப்

ஆலுவா சிறையில் திலீப்

இந்நிலையில் பிரபல மலையாள நடிகை கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் அண்மையில் கைது செய்யப்பட்டார் நடிகர் திலீப். இவருக்கு ஜாமீன் வழங்க கேரள ஹைகோர்ட் மறுப்பு தெரிவித்ததையடுத்து அவர் மீண்டும் ஆலுவா கிளைச் சிறையிலேயே அடைக்கப்பட்டுள்ளார்.

 கேரள சிறையிலும் சலுகை

கேரள சிறையிலும் சலுகை

அவருக்கும் சசிகலாவைப் போல சிறையில் சகல வசதிகளும் கிடைப்பதாக கூறப்படுகிறது. திலீப்புக்கு என கைதி ஒருவர் உதவிக்காக நியமிக்கப்பட்டுள்ளாராம்.

 உதவியாளர் ஒரு தமிழராம்

உதவியாளர் ஒரு தமிழராம்

அவர்தால் திலீப்பின் துணிகளை துவைப்பது, அவர் சாப்பிடும் தட்டை கழுவுவது, அவர் பயன்படுத்தும் கழிவறையை சுத்தப்படுத்துவது என சகல வேலைகளையும் செய்து கொடுக்கிறாராம். மேலும் அந்தக் கைது திருட்டு வழக்கில் கைதான ஒரு தமிழராம்.

 திலீப்புக்கு ஸ்பெஷல் சாப்பாடு

திலீப்புக்கு ஸ்பெஷல் சாப்பாடு

திலீப்புக்கு கைதிகளுக்கு வழங்கப்படும் உணவு கொடுக்கப்படுவதில்லை. சிறை அதிகாரிகளுக்கு சமைக்கப்படும் ஸ்பெஷல் உணவுதான் திலீப்புக்கும் கொடுக்கப்படுகிறதாம்.

 குளிப்பதிலும் சலுகை

குளிப்பதிலும் சலுகை

மற்ற கைதிகள் உணவு சாப்பிட்டுவிட்டு தங்கள் அறைகளுக்கு சென்று விடுவார்கள். அதன் பிறகு திலீப் சமையல் அறைக்கு சென்று சிறப்பு உணவை சாப்பிடுகிறாராம். இதேபோல் குளிப்பதிலும் திலீப்புக்கு கேரள சிறைத்துறை அதிகாரிகள் சலுகை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 பெருந்தொகை செலவு

பெருந்தொகை செலவு

நடிகையை கடத்தி பாலியல் துன்புறுத்தல் கொடுக்க ஒன்றரை கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்தவர் திலீப். தற்போது சிறையில் சலுகைகளை பெற ஒரு பெந்தொகையை செலவழித்திருப்பார் என கூறப்படுகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Actor Dileep also getting special privileges in the Aluva jail. Dileep is in jail for actress kidnapping case.
Please Wait while comments are loading...