படுக்கைக்கு அழைக்கும் கலாசாரம்...தென்னிந்திய படத் தயாரிப்பாளர் மீது பிரபல நடிகை புகார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தென்னிந்திய பட உலகைச் சேர்ந்த தயாரிப்பாளர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பான புகாரை தெரிவித்துள்ளார்.

சினிமா துறைகளில் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் என பலர் பாலியல் தொல்லைகள் கொடுப்பதாக நடிகைககள் குற்றம்சாட்டியுள்ளனர். அதிலும் புதிதாக துறைக்கு வரும் நடிகைகளுக்கே இதுபோன்ற தொல்லைகள் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

தெலுங்கு, தமிழ் பட உலகில் நடிக்க வாய்ப்பு கேட்டு வரும் நடிகைகளுக்கு சிலர் பாலியல் தொல்லை கொடுப்பதாகவும் தெரியவருகிறது. எனினும் அவர்கள் யார் என்பது குறித்து யாரும் இதுவரை வெளியிட்டதில்லை.

பரபர குற்றச்சாட்டு

பரபர குற்றச்சாட்டு

இந்நிலையில் கபாலியில் நடிகர் ரஜினிகாந்துடன் ஜோடியாக நடித்த ராதிகா ஆப்தேவும் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். தென்னிந்திய படஉலகிலும் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் கலாசாரம் இருப்பதாகவும் அவர் புகார் தெரிவித்துள்ளார்.

கவர்ச்சி நடிகை

கவர்ச்சி நடிகை

நடிகை ராதிகா ஆப்தே கபாலி, டோணி, வெற்றிச்செல்வன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். அவர் தெலுங்கிலும் நடித்து வருகிறார். இந்தி பட உலகில் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார். பாலிவுட் படங்களில் அவர் படு கவர்ச்சியாக நடித்து வருவதாக கூறப்படும் நிலையில் அவரது ஆபாசமான புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

படுக்கைக்கு அழைத்தார்

படுக்கைக்கு அழைத்தார்

இதுகுறித்து ராதிகா ஆப்தே கூறுகையில் தென்னிந்திய பட உலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் நிலை உள்ளது. ஒரு முறை தயாரிப்பாளர் ஒருவரை சந்தித்தேன். அவருடன் படம் தொடர்பாக பேசி கொண்டிருந்தபோது திடீரென என்னை படுக்கைக்கு அழைத்தார்.

உதாசினம் செய்தேன்

உதாசினம் செய்தேன்

இதனால் நான் பெரிதும் அதிர்ச்சி அடைந்தேன். எனினும் அவரை உதாசினப்படுத்திவிட்டு சென்றுவிட்டேன். தென்னிந்திய மொழி படங்களில் எனக்கு அதிக பட வாய்ப்புகள் வரவில்லை என்றே நினைக்கிறேன் என்றார் அவர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Actress Radhika Apte says that there is a sexual abusement in South Indian Film Industry too. She also accused that a producer who mets her recently expects sex from her.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற