For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நான்-வெஜ் சாப்பிட்டா.. விரட்டி விரட்டி "கொத்தும்" பாம்பு.. பயந்து ஓடும் கிராம மக்கள்

Google Oneindia Tamil News

புவனேஸ்வர்: ஒடிசாவில் பாம்பு கடித்துவிடும், கடவுளின் கோபத்திற்கு ஆளாவர்கள் என பயந்து ஒரு கிராமத்தினர் நீண்ட நாட்களாக அசைவ உணவு சாப்பிடாமல் வெறும் சைவ உணவுகளை மட்டுமே சாப்பிட்டு வருகின்றனர்.

ஒடிசா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமம் முழுவதும் அசைவ உணவே யாரும் சாப்பிட மாட்டார்கள் என்ற செய்தி வெளியாகி இருக்கிறது.

அசைவ உணவு சாப்பிடாததில் விஷேசம் எதுவும் இல்லை என்பது உண்மைதான்.

தங்கம் வென்ற பிரக்ஞானந்தா-நந்திதா.. ‛‛கிரீடத்தில் பதிக்கப்பட்ட வைரங்கள்’’..விஜயபாஸ்கர் சொன்ன மெசேஜ் தங்கம் வென்ற பிரக்ஞானந்தா-நந்திதா.. ‛‛கிரீடத்தில் பதிக்கப்பட்ட வைரங்கள்’’..விஜயபாஸ்கர் சொன்ன மெசேஜ்

சற்று வினோதமான காரணம்

சற்று வினோதமான காரணம்

ஆனால், அசைவ உணவை சாப்பிடாமல் இருப்பதற்காக அந்த கிராமத்தினர் கூறும் காரணம் தான் சற்று வினோதமாக உள்ளது. கிராமத்தினர் அசைவ உணவை சாப்பிடாமல் இருக்கும் விவகாரம் செய்திகளில் அடிபடுவதற்கும் அந்த கிராம மக்களின் நம்பிக்கையே முக்கிய காரணமாக அமைந்துள்ளது. அசைவ உணவு சாப்பிட்டால் தங்களை பாம்பு கடித்துவிடும் என்று நம்பும் அந்த கிராம மக்கள் இதற்காகவே வெஜிட்டேரியன் உணவு வகைகளை மட்டுமே சாப்பிட்டு வருகின்றனர்.

காலம் காலமாக இந்த பழக்கத்தை..

காலம் காலமாக இந்த பழக்கத்தை..

ஒடிசாவின் தேன்கனல் மாவட்டத்தில் உள்ள பென்டசாலியா கிராமத்தில் உள்ள மக்கள்தான் இந்த வினோத பழக்கத்தை கடைபிடிக்கின்றனர். இது குறித்த தகவல் வெளியானதும் கிராம மக்கள் பலரும் இது பற்றி விசாரிக்க தொடங்கியிருக்கின்றனர். அப்போதுதான், காலம் காலமாக இந்த பழக்கத்தை பின்பற்றி வருவதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

யாராவது அசைவ உணவு சாப்பிட்டால்

யாராவது அசைவ உணவு சாப்பிட்டால்

சைவ உணவுகளை மட்டும் சாப்பிடுவதால் இந்த கிராமத்தில் வசிக்கும் ஒருவர் கூட கால்நடைகளை வளர்ப்பது இல்லையாம். தங்களின் நம்பிக்கையை மீறி யாராவது அசைவ உணவு சாப்பிட்டால் அவர்களுக்கு கண் பாதிப்பு மற்றும் உடல் நல பாதிப்பு ஏற்படும் என்று முன்னோர்கள் கூறி விட்டு சென்றதாகவும் அதனால், இந்த பழக்கத்தை தீவிரமாக கடைபிடிப்பதாகவும் கிராம மக்கள் கூறி வருகின்றனர்.

கடவுளின் கோபத்திற்கு ஆளாவர்கள்

கடவுளின் கோபத்திற்கு ஆளாவர்கள்

யாராவது தவறுதலாக அசைவ உணவை சாப்பிட்டுவிட்டால் உடனடியாக கோவிலுக்கு சென்று அங்குள்ள சாமியாரிடம் பூஜை செய்து விட்டுதான் திரும்புவார்களாம். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிக்ளில் கூட சாப்பட்டு மெனுக்களில் நான் வெஜ் உணவுகள் மறந்தும் கூட இடம் பெறாதாம். இது குறித்து அந்த கிராமத்தை சேர்ந்த ஒருவர் கூறுகையில், "அசைவ உணவை யாராவது சாப்பிட்டால் அவர்கள் கடவுளின் கோபத்திற்கு கண்டிப்பாக ஆளாவர்கள். கண்பார்வை கோளாறு, எலும்பு முறிவுகள் என கடுமையான உடல் நல பாதிப்புகள் ஏற்படும்" என்றும் தாங்கள் நம்புவதாக தெரிவித்தார்.

விஷபாம்பு கடிக்கும்

விஷபாம்பு கடிக்கும்

மூட நம்பிக்கையின் உச்சமாக இந்த கிராமத்தினர் கடைபிடிக்கும் இந்த வினோத பழக்க வழக்கம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதேவேளையில், இது குறித்து அந்த கிராமத்தை சேந்த மற்றொரு நபர் கூறுகையில், "நான் வெஜ் உணவுகளை சாப்பிட்டால் விஷபாம்பு கடிக்கும், உடல் நல பாதிப்புகள் ஏற்படும் என்ற கதையை சிறு வயது முதலே நாங்கள் கேட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கு நான்வெஜ் உணவுகள் மீதே ஒரு வித வெறுப்பு வந்து விட்டது. அதன் காரணமாகவே இதை முற்றிலும் நிராகரித்து வருகிறோம்" என்றார்.

English summary
An incident has taken place in Odisha where a villager did not eat non-vegetarian food for a long time for fear of snake bite.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X