For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

9 ஆண்டுகளுக்குப் பிறகு கையெழுத்தான புல்லட் ப்ரூப் ஜாக்கெட் ஒப்பந்தம்: ராணுவ வீரர்கள் மகிழ்ச்சி

9 ஆண்டுகளுக்குப் பிறகு ’மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் புல்லட் ப்ரூப் ஜாக்கெட் ஒப்பந்தம் கையெழுத்தானது.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

Recommended Video

    ஒரு வழியாக ராணுவ வீரர்களுக்கு புல்லட் ஃப்ரூப் ஜாக்கெட் கிடைக்க போகிறது- வீடியோ

    டெல்லி: ராணுவ வீரர்களுக்கான புல்லட் ப்ரூப் ஜாக்கெட் வேண்டி வைக்கப்பட்ட கோரிக்கை 9 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று கையெழுத்தானது. இதுவரை கையெழுத்தான 'மேக் இன் இந்தியா' திட்டங்களிலேயே இந்த திட்டம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

    கடந்த 2009ம் ஆண்டு 1.86 லட்சம் வீரர்களுக்கு புல்லட் ப்ரூப் ஜாக்கெட் வேண்டி ராணுவம் மத்திய பாதுகாப்புத்துறையிடம் கோரிக்கை வைத்தது. டெண்டர் கோரி விண்ணப்பத்த நான்கு நிறுவனங்களில் ஒரு நிறுவனம் மட்டும் முதற்கட்ட தேர்வில் வெற்றி பெற்றது.

    After nine years Indian soldiers to get Bullet Proof Jackets

    ஆனால், அடுத்த கட்ட தேர்வில் அந்த நிறுவனம் தயாரித்த மாடல் புல்லட் ப்ரூட் ஜாக்கெட்டுகள், அனைத்து விதமான பயன்பாட்டுக்கும் ஏற்ப இல்லாததால், அந்த நிறுவனம் தோல்வி அடைந்தது. அதனையடுத்து எந்த நிறுவனமும் ராணுவத்தின் பாதுகாப்புத் தேர்வில் தேர்ச்சி பெறாததால், அடுத்து ஒப்பந்தம் கையெழுத்தாவதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டது.

    சுமார் 9 ஆண்டுகளுக்குப் பிறகு, எஸ்.எம்.பி.பி. என்கிற டெல்லியைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ராணுவத்தின் பாதுகாப்பு வழிமுறைகளுக்கு ஏற்ப புல்லட் ப்ரூப் ஜாக்கெட்டை தயாரிக்க முன்வந்துள்ளது. இதற்கான ரூ.639 கோடி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகி உள்ளது.

    இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 3 ஆண்டுகளில் ராணுவத்திற்கு தேவையான புல்லட் ப்ரூப் ஜாக்கெட்டுகளைத் தயாரித்து வழங்க இருப்பதாகவும், அவை அனைத்தும் புதிய தொழில்நுட்பமான போரான் கார்பைடு செராமிக் முறையில் தயாரிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் தெரிவிக்கையில், 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் இந்த ஒப்பந்தம் வெளியிடப்பட்டதால், சிறப்பான தரத்தில் தயாரிக்கும் நிறுவனத்திற்குதான் டெண்டர் வழங்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு இருந்தது. ஒவ்வொரு ராணுவ வீரரின் உயிரும் மிக முக்கியம் என்பதால் அந்த முடிவை பாதுகாப்பு அமைச்சகம் எடுத்து இருந்தது.

    இறுதியாக இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் உலகத் தரம் வாய்ந்த புல்லட் ப்ரூப் ஜாக்கெட் ராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இந்த கவசம் முக்கியமான தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடும் வீரர்களுக்கு தன்னம்பிக்கையும் தைரியத்தையும் கொடுக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

    English summary
    After nine years Indian soldiers to get Bullet Proof Jackets. the government today signed a major 'Make in India' contract which the request is made before nine years by the army.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X