அல்கொய்தா தீவிரவாதி டெல்லியில் கைது
அல்கொய்தா இயக்க தீவிரவாதி ஒருவர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: அல்கொய்தா தீவிரவாதி ஒருவர் டெல்லியில் கைதுசெய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து டெல்லி போலீசார் கூறுகையில், " அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தில் தொடர்புடைய நபர் ஒருவர், நேபாளத்துக்கு தப்பிச் செல்ல முயற்சித்த போது கைது செய்யப்பட்டார். உளவுத்துறை கொடுத்த தகவலின் அடிப்படையில் தீவிரவாதி கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்கொண்டு விசாரிக்க தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. மூன்று நாட்களுக்கு முன்பாக இந்திய ராணுவம் 3 தீவிரவாதிகளை காஷ்மீரில் சுட்டுக்கொன்றது. இந்த நிலையில் அல்கொய்தா தீவிரவாதி கைது செய்யப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
கொல்லப்பட்ட மற்றும் கைதகியுள்ள தீவிரவாதிகள் அல்கொய்தா இயக்கத்தின் தொடர்பில் உள்ள இன்னொரு அமைப்பான ஜாகீர் முஷா பேக்ஸான் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications