சாம்சங் போன் வாங்க ப்ளான் இருந்தால் வாங்கிவிடுங்க.. போனா வராது, பொழுதுபோனா கிடைக்காது

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: அமேசான் ஆன்லைன் நிறுவனம் நடத்தும், சாம்சங் கார்னிவல் தள்ளுபடி விற்பனையில், சாம்சங் செல்போன்களுக்கு அதிகப்படியாக ரூ.10,000 வரை டிஸ்கவுண்ட் வழங்கப்பட்டுள்ளது.

நவம்பர் 8ம் தேதி தொடங்கிய இந்த ஆஃபர் மழை, வரும் 11ம் தேதிவரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் நிறுவன பொருட்களுக்கு மட்டுமே இந்த அதிரடி ஆஃபர்கள் பொருந்தும். டிவிகளுக்கு 30 சதவீதம் தள்ளுபடி கிடைக்கிறது.

நோட்-8க்கும் டிஸ்கவுண்ட்

நோட்-8க்கும் டிஸ்கவுண்ட்

சாம்சங் சமீபத்தில் அறிமுகம் செய்த ரூ.67,900 மதிப்பிலான கேலக்சி நோட்-8 வகை போனுக்கு ஹெச்டிஎப்சி கிரெடிட் கார்டு எனில் 4000 வரை கேஷ்பேக் கிடைக்கிறது. நோ காஸ்ட் இஎம்ஐ உண்டு. 9500 வரை இந்த வகை போனுக்கு எக்சேஞ்ச் ஆஃபரும் உள்ளது.

கேலக்சி ஏ9

கேலக்சி ஏ9

ரூ.25,200க்கு விற்பனையாகும், கேலக்சி ஏ9 ப்ரோ வகை போன்கள் 22,900 என்ற விலையில் கிடைக்கிறது. கேலக்சி ஏ5 (2017) வகை போன்களின் சந்தை மதிப்பு ரூ.24,500. ஆனால் தள்ளுபடியில் 18,900 விலையில் கிடைக்கிறது.

ஆஃபரில் போன்கள்

ஆஃபரில் போன்கள்

கேலக்சி ஜே7 மேக்ஸ் 32 ஜிபி போன்களுக்கு ரூ.1,321 தள்ளுபடி கொடுக்கப்பட்டு, 17,829 என்ற விலையில் கிடைக்கிறது. கேலக்சி ஏ7 வகை போனுக்கு ரூ.5710 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. அதன் சந்தை மதிப்பு ரூ.27,700, ஆனால் ஆஃபரில் ரூ.21900க்கு போன் கிடைக்கிறது.

4 ஆயிரம் டிஸ்கவுண்ட்

4 ஆயிரம் டிஸ்கவுண்ட்

கேலக்சி சி9 ப்ரோ, 6ஜிபி ராம் கொண்ட போனின் சந்தை மதிப்பு ரூ.34,000. ஆஃபரில் ரூ.29,900 விலையில் கிடைக்கிறது. இந்த போனுக்கு சுமார் 4000 ஆஃபர் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Amazon India has begun the 'Samsung Carnival' on its website which has put up for sale all Samsung appliances, accessories and smartphones.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற