For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அம்பரீஷுக்கு நெஞ்சு வலி.. டிவிட்டரில் நடிகை ரம்யா தகவல்

Google Oneindia Tamil News

பெங்களூர்: பிரபல கன்னட நடிகரும், கர்நாடக வீட்டு வசதி த்துறை அமைச்சருமான அம்பரீஷுக்கு திடீரன நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை பெங்களூர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இந்தத் தகவலை மாண்டியா எம்.பியும், நடிகையுமான ரம்யா டிவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரம்யா வெளியிட்டுள்ள செய்தியில், போதிய ஓய்வு எடுக்காததால், அம்பரீஷ் அங்கிளின் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அவரை நான் போய் மருத்துவமனையில் பார்த்து நலம் விசாரித்தேன். அவர் வழக்கம் போல என்னிடம் பேசினார். சீக்கிரமே வீட்டுக்குத் திரும்ப விரும்புவதாகவும் தெரிவித்தார் என்று கூறியுள்ளார்.

Ambareesh Now Stable: Doctors

மூச்சுத் திணறல் மற்றும் நெஞ்சு வலிப்பதாக அம்பரீஷ் கூறவே அவரை குடும்பத்தினர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பெங்களூர் விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அம்பரீஷ் விரைவில் வீடு திரும்புவுார் என்று கூறப்படுகிறது. அவரது நிலை தற்போது ஸ்திரமாக இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

நுரையீரலில் அம்பரீஷுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டிருக்கிறதாம். இதன் காரணமாகவே அவருக்கு மூச்சுத் திணறல் மற்றும் நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவர் சுய நினைவுடன் இருப்பதாகவும், நோய்த் தொற்றை ஏற்படுத்திய திரவம் அவரது நுரையீரலிலிருந்து அகற்றப்பட்டு விட்டதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது அவருக்கு டியூப் மூலம் திரவ உணவு செலுத்தப்படுகிறது. செயறைச் சுவாசத்தில் அவர் வைக்கப்பட்டுள்ளார்.

பல்வேறு கன்னடப் படங்களிால் நடித்துள்ள அம்பரீஷ், தமிழில் ரஜினிகாந்த், ஸ்ரீதேவி நடித்த பிரியா படத்திலும் நடித்தவர் ஆவார். இப்படத்தில் அவர் ஸ்ரீதேவிக்கு ஜோடியாக நடித்திருந்தார். அம்பரீஷ் நடிகர் ரஜினிகாந்த்தின் நெருங்கிய நண்பரும் ஆவார்.

English summary
Karnataka Minister for Housing Actor Ambareesh is now stable, doctors treating him at Vikram Hospital said. The actor-turned-politician is now on ventilator support and is being given a liquid diet. He was hospitalised on Friday. Chief pulmonologist Dr K S Satish, who is attending to Ambareesh, said the Minister has been diagnosed with a lung infection. The infected liquid has been drained out of his lungs.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X