ஐரோப்பாவில் கொளுத்தும் ஹீட் வேவ்.. தீக்குள் சிக்கிய ரயில்! தவித்த பயணிகள்! பதைபதைக்க வைத்த வீடியோ
மாட்ரிட்: ஸ்பெயின் நாட்டில் தீப்பற்றி எரியும் நடுகாட்டில் பயணிகள் ரெயில் ஒன்று நின்றிருக்கும் வீடியோ காட்சி பார்ப்பவர்களை பதைபதைக்க செய்துள்ளது.
Recommended Video
ஐரோப்பிய நாடுகளில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கடும் வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. இதமான காலநிலைகள் நாடுகளாக அறியப்படும் ஐரோப்பிய நாடுகளில் இத்தகைய வரலாறு காணாத வெப்ப அலை அங்குள்ள மக்களை விழி பிதுங்க வைத்துள்ளது. வெப்பத்தை தணிக்க மக்கள் கடற்கரைகளில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
குறிப்பாக ஐரோப்பாவில் உள்ள போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் ஆகிய இருநாடுகளில் மகக்கடுமையான வெப்பம் தகிக்கிறது. இந்த தீவிர வெப்ப அலை ஸ்பெயின், அண்டோரா, பிரான்ஸ் மற்றும் பிற நாடுகளிலும் பரவி, பெருமளவிலான காட்டுத்தீயும் ஏற்பட்டு உள்ளது.

368 பேர் பலி
வடமேற்கு ஸ்பெயினில் உள்ள சமோரா பகுதியில் வெப்ப அலையால் இரண்டு பேர் உயிரிழந்து இருக்கிறனர். தாங்க அடியாத அளவுக்கு அனல் காற்று வீசுகிறது. இதனால், ஸ்பெயினில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இவற்றில் பல இடங்களில் காட்டூத்தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. தொடர்ந்து தீ பரவி எரிந்து கொண்டு இருப்பதாக ஸ்பெயின் அதிகாரிகள் கூறி வருகின்றனர். ஸ்பெயினின் வடமேற்கு முதல் தென்மேற்கு பகுதிகள் வரை சுமார் 4,5400 ஹெக்டேர் நிலங்கள் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ளன. வெப்ப அலை காரணமாக இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 368 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

போராடும் தீயணைப்பு வீரர்கள்
எனினும் 8 நாட்களாக தொடர்ந்து தீ பரவி எரிந்து வருவதால், தீயணைப்பு படையினர் திகைத்துள்ளனர். அவர்களும் இரவு பகலாக தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க போராடி வருகின்றனர். தற்போது ஹெலிகாப்டர் மூலமாகவும் தீயணைப்பு படையினர் தீயை அணைக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். எனினும் தீ ஒவ்வொரு இடமாக பரவி வருகிறது. குறிப்பாக ஸ்பெயினின் வடக்கு மாகாணமான சமோராவில் உள்ள காடுகளில் தீ பற்றி எரிந்து வரும் நிலையில், அந்து காட்டுக்குள் பயணிகள் ரெயில் ஒன்று சிக்கிக்கொண்டுள்ளது. மேலும் அந்த ரெயிலில் இருந்த பயணிகளை காட்டுத்தீ சூழ்ந்து கொண்டு எரியும் பதைபதைக்க வைக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளன.

பதைபதைக்க வைக்கும் காட்சிகள்
மாட்ரிட்டில் இருந்து ஃபெரோல் நகருக்கு பயணிகள் ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. சுற்றிலும் மரங்கள் ரம்மியமான பாதையை கொண்ட இந்த வழித்தடத்தில் திடீரென புகை கிளம்பியது. இதனால் அந்த ரெயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. சிறிது நேரத்தில் ரெயிலின் இருபுறம் இருந்த மரங்களும் தீ பிடித்து எரிந்தன. இந்தக் காட்சிகளை ஜன்னல் வழியாக பார்த்த பயணிகள் அச்சத்தில் உறைந்து போகினர். ரெயிலின் இருபுற ஜன்னல் கண்ணாடி வழியாக பார்க்கும் போது காடுகளின் இருபுறமும் தீ எரியும் காட்சிகள் பயணிகளை பதைபதைக்க வைத்துள்ளது. செய்வதறியாது திகைத்த அவர்கள் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களிலும் பரவி பார்ப்பவர்களை பதைபதைக்க வைத்து இருக்கின்றன.

மறு அறிவிப்பு வரும் வரை ஓடாது
நெஞ்சை பதைபதைக்க வைக்கும் இந்த சம்பவம் குறித்து ரெயில் நிறுவனம் கூறுகையில், 'சமோரா மாகாணத்தில் உள்ள ஒடேரே, டி போடஸ் ஆகிய இடங்களுக்கான ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்ட்டுள்ளது. அந்த வழியாக செல்லும் அனைத்து ரெயில்களும் மறு அறிவிப்பு வரும் வரை ஓடாது. பயணிகள் சிரமத்தை குறைப்பதற்காக சாலை வழியில் மாற்று பயண திட்டங்களை ஆலோசித்து வருகிறோம். பயணிகள் பாதுகாப்பை கவனத்தில் கொண்டே நாங்கள் ஒவ்வொரு முடிவையும் எடுப்போம்' எனத்தெரிவித்துள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications