Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வந்துட்டேன்னு சொல்லு.! காஷ்மீர் போன அமித்ஷா, செய்த 2 தரமான செயல்கள்.. மிரண்டு போன பாக்.,!

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: 2019ஆம் ஆண்டு புல்வாமா சிஆர்பிஎஃப் கேம்ப்பைச் சேர்ந்த துணை ராணுவத்தினரை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். தீவிரவாதிகள் தாக்குதலில் பலியான சிஆர்பிஎஃப் வீரர்கள் தங்கியிருந்த புல்வாமா கேம்பிற்கு நேற்று வந்த அமித்ஷா, வீரர்களுடன் உணவு அருந்தியதுடன், இரவு முழுவதும் அவர்களுடன் தங்கியிருந்தார்.

மத்திய ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த வாகனங்கள் 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் லேத்போரா எனும் இடத்துக்கு அருகில் சென்று கொண்டிருந்த போது , பாதுகாப்பு படையினரின் வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதல் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 40 வீரர்கள் வீர மரணமடைந்தனர். பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தி இருந்ததாக மத்திய அரசு தெரிவித்து இருந்தது. இந்த தாக்குதலுக்கு பதிலடியும் இந்திய ராணுவம், பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று கொடுத்தது.

 காஷ்மீர் வந்தார்

காஷ்மீர் வந்தார்

ஆனால் அதன் பிறகு அடுத்த சில மாதங்களில் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் முதல் முறையாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 3 நாள் பயணமாக கடந்த சனிக்கிழமை அன்று ஜம்மு காஷ்மீர் சென்றார்.

 உணவு சாப்பிட்டார்

உணவு சாப்பிட்டார்

அங்கு புல்வாமாவில் உள்ள சி.ஆர்.பி.எப்., முகாமுக்கு சென்ற அமித் ஷா, வீரர்களுடன் கலந்துரையாடினார். வீரர்கள் மத்தியில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு - காஷ்மீர் பயணத்திலேயே, சி.ஆர்.பி.எப்., முகாமுக்கு வந்தது தான் முக்கிய நிகழ்ச்சி. இன்றைய இரவை உங்களுடன் தங்கி உங்கள் பிரச்னையை புரிந்து கொள்ள விரும்புகிறேன் எனவும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து அவர்களுடன் இரவு உணவு அருந்திய அமித்ஷா, முகாமிலேயே இரவு தங்கினார்.

 நம்பிக்கை

நம்பிக்கை


ஜம்மு-காஷ்மீரில் தற்போது சட்டம்-ஒழுங்கு நிலைமை மேம்பட்டு வருகிறது. பிரதமா் நரேந்திர மோடி எதிா்நோக்கியுள்ளபடி, அமைதியான ஜம்மு-காஷ்மீரை விரைவில் நாம் காண முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. முழுமையான அமைதி நிலை திரும்பும் வரை நாம் திருப்திப்படக் கூடாது.

 இல்லாத நிலை

இல்லாத நிலை

காஷ்மீரில் கற்கள் வீசும் சம்பவங்களை நாம் தேடிதேடிதான் பார்க்கிறோம். காஷ்மீரில் கல் வீச்சு என்பது ஒரு காலத்தில் சர்வசாதாரணமாக இருந்தது. இதுபோன்ற சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளது. ஆனால், கல் வீச்சு சம்பவங்களே இல்லாத நிலை வந்தால் தான் திருப்தியாக இருக்கும்.

காப்பாற்றுவோம்

காப்பாற்றுவோம்

நரேந்திர மோடி அரசு பயங்கரவாதத்தின் மீதுசகிப்புத்தன்மையற்ற கொள்கையைக் கொண்டுள்ளது. பயங்கரவாதத்தை எங்களால் தாங்க முடியாது. இது மனிதநேயத்திற்கு எதிரானது. மனித குலத்திற்கு எதிரான இந்த கொடூரமான குற்றத்தில் தொடர்புடைய நபர்களிடமிருந்து காஷ்மீர் மக்களை காப்பாற்றுவதே நமது முன்னுரிமையாக இருக்கிறது.

Recommended Video

    எல்லையில் அத்துமீறினால் மீண்டும் Surgical strike. Pakistan-க்கு Amit Shah எச்சரிக்கை|Oneindia tamil
    வளர்ச்சி

    வளர்ச்சி

    உள்கட்டமைப்பு, தொழில்துறை மற்றும் கல்வித் துறைகளில் வளர்ச்சியை அதிகரிக்கும் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன, ஏனெனில் அனைத்து மோசமான பயங்கரவாத செயல்களும் தோற்கடிக்கப்படுவதை இராணுவம் மற்றும் சிஆர்பிஎஃப் உறுதிசெய்கின்றன. காஷ்மீரில் ரத்தம் சிந்துவது தடுக்கப்பட்டுள்ளது. ஒரு முறை கூட துப்பாக்கிச்சூடு நடக்கவில்லை" என்று அமித்ஷா கூறினார். .

     சாலை பணிகள்

    சாலை பணிகள்

    முன்னதாக காஷ்மீரில் பல்வேறு மேம்பாட்டு பணிகளை தொடங்கி வைத்ததுடன் பல்வேறு திட்டங்களுக்கு அமித்ஷா அடிக்கல் நாட்டினார். மூன்றாவது நாளான நேற்று பிமீனாவில் 300 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள புதிய மருத்துவமனையை தொடங்கி வைத்தார். மேலும் 115 கோடியில் கட்டப்பட இருக்கும் ஹந்த்வாரா மருத்துவ கல்லூரி, ரூ.40 கோடியில் எஃகு பாலம், ரூ.4000 கோடி மதிப்பீட்டில் சாலை பணிகள் உள்ளிட்டவற்றுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா அடிக்கல் நாட்டினார்.

     அமித்ஷா அதிரடி

    அமித்ஷா அதிரடி

    நேற்று ஸ்ரீநகர் பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசினார். இதற்காக விழா மேடையில் துப்பாக்கி குண்டுகள் துளைக்காத வகையில் புல்லட் கண்ணாடி கவசம் அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால் அதற்குள் இருந்து பேசுவதற்கு அமித்ஷா மறுத்துவிட்டார். உடனடியாக அதனை அகற்றும்படி உத்தரவிட்டார். இதனை அடுத்து குண்டு துளைக்காத கண்ணாடி அகற்றப்பட்டது. அதன் பின்னர் அமித்ஷா பேசும் போது, நான் உங்களிடம் வெளிப்படையாக பேச விரும்புகிறேன். இதற்கு எதற்காக புல்லட் ப்ரூஃப் அல்லது பாதுகாப்பு. நான் உங்கள் முன் அப்படியே நின்று பேசுகிறேன் என்று பேச தொடங்கினார்.

     7 மருத்துவ கல்லூரிகள்

    7 மருத்துவ கல்லூரிகள்

    அப்போது அமித்ஷா பேசும் போது, பாகிஸ்தான் மற்றும் பிரிவினைவாதிகளுடன் பேச வேண்டும் என்று பரிந்துரை செய்தவர்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் என்ன செய்தது என்று கேட்க வேண்டும். காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரிமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டு பாருங்கள். அவர்களுக்கு மின்சாரம் சாலைவசதி, சுகாதார வசதி, கழிவறை வசதி உள்ளதா? எந்த வசதியும் செய்து தரப்படவில்லை. ஆனால் காஷ்மீர் மக்கள் ஒவ்வெருவரும் மற்ற இந்தியர்களை போல அதே உரிமையை பெற்றுள்ளனர், ஜம்முவை ஆட்சி செய்த 3 குடும்பங்களும் மூன்று மருத்துவ கல்லூரிகளை மட்டுமே அமைத்தன. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி 7 மருத்துவ கல்லூரிகளை உறுதி செய்துள்ளார். முன்பு 500 மாணவர்கள் மருத்துவர்கள் ஆனார்கள். இனி 2000 பேர் மருத்துவர்கள் ஆவார்கள். இனி மருத்துவம் படிப்பதற்கு காஷ்மீரைச் சேர்ந்த யாரும் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை" இவ்வாறு அமித்ஷா கூறினார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+