மதச்சார்பின்மை குறித்து இழிவான பேச்சு-மத்திய அமைச்சர் ஆனந்தகுமாருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் அமளி!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: மதச்சார்பின்மையாளர்கள் குறித்து இழிவாக விமர்சித்த மத்திய அமைச்சர் ஆனந்தகுமார் ஹெக்டே மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியதால் நாடாளுமன்ற இரு சபைகளும் அமளி காடானது.

மதச்சார்பின்மையாளர்கள் என்பவர் தங்களது பெற்றோர் யார் என தெரியாதவர்கள் என கேவலமாக விமர்சித்திருந்தார் ஆனந்தகுமார் ஹெக்டே. அத்துடன் மதச்சார்பின்மை என்பதையே அரசியல் சாசனத்தில் இருந்து மாற்றுவோம்; அதற்குதான் பாஜக ஆட்சிக்கே வந்திருக்கிறது என்றும் கூறினார்.

Anantkumar Hegde’s change the Constitution remarks rocks Parliament

அவரது இப்பேச்சு நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. நாடாளுமன்றத்தில் இரு சபைகளிலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. ராஜ்யசபாவில் எதிர்க்கட்சித் தலைவர் குலாம்நபி ஆசாத் இந்த விவகாரத்தை எழுப்பினார். அப்போது, நாட்டின் அரசியல் சாசன அமைப்பின் மீது நம்பிக்கை இல்லாத ஒருவர் எப்படி மத்திய அமைச்சரவையில் இடம்பெற முடியும் என கேள்வி எழுப்பினார் குலாம்நபி ஆசாத்.

மேலும், ஆனந்தகுமார் ஹெக்டே மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது அவரை அமைச்சரவையில் இருந்து பிரதமர் மோடி டிஸ்மிஸ் செய்ய வேண்டும் எனவும் குலாம்நபி ஆசாத் வலியுறுத்தினார்.

ஆனந்தகுமார் ஹெக்டேவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி எம்.பி.க்கள் சபையின் மையப் பகுதியில் முழக்கமிட்டனர். இதனால் அமளி துமளியாக இருந்தது.

இதேபோல் லோக்சபாவிலும் ஆனந்தகுமார் விமர்சனத்தால் அமளி ஏற்பட்டது. இதனால் சபை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Opposition Parties Protests continued in Parliament on Wednesday over Union Minister Anantkumar Hegde’s remarks over amending Constitution.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற