For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குஜராத்தில் அடுத்தடுத்து கூட்டம்.. அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியாவின் அரசியல் வியூகம் என்ன?

Google Oneindia Tamil News

காந்திநகர்: குஜராத்தில் இந்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக இன்று குஜராத்தில் நடைபெறும் கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா பேச உள்ளனர்.

Recommended Video

    AAPயின் Gujarat Target! Modiக்கு போட்டியாக வரும் Arvind Kejriwal | OneIndia Tamil

    182 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது.

    பாஜக ஆட்சி நடைபெற்று வரும் குஜராத்தில், தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

    குஜராத்தில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் இன்று மற்றும் நாளை என அடுத்தடுத்து குஜராத்தில் நடைபெறும் கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா பேச உள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அடுத்தடுத்து அதிரடி.. மணீஷ் சிசோடியா மீது அமலாக்கத்துறை விரைவில் அடுத்தடுத்து அதிரடி.. மணீஷ் சிசோடியா மீது அமலாக்கத்துறை விரைவில்

     எதிர்க்கட்சிகள் வியூகம்

    எதிர்க்கட்சிகள் வியூகம்

    குஜராத்தில் ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிகளுக்கு போட்டியாக ஆம் ஆத்மி கட்சியும் கோதாவில் இறங்கியுள்ளது. 1998 ஆம் ஆண்டு முதல் குஜராத்தில் பாஜக ஆட்சியே உள்ளது. இதனால் இந்த முறை எப்படியாவது ஆட்சியை கைப்பற்றிவிட வேண்டும் என எதிர்க்கட்சிகள் இப்போதே வியூகங்களை வகுத்து வருகின்றன. அண்மையில் நடைபெற்ற பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடித்த உற்சாகத்துடன் இருக்கும் ஆம் ஆத்மி கட்சி தற்போது குஜராத் பக்கம் தன் கவனத்தை திருப்பியிருக்கிறது.

    2 நாள் சுற்றுப்பயணமாக

    2 நாள் சுற்றுப்பயணமாக

    குஜராத்திற்கு அவ்வப்போது தேர்தல் பிரசாரத்திற்கும் சென்று வரும் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் வாக்காளர்களை கவரும் வகையில் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அளித்து வருகிறார். இந்த நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவும் 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று குஜராத்திற்கு செல்கின்றனர். மதுபான கொள்கைகள் அமல்படுத்தியதில் முறைகேடுகள் நடைபெற்றதாக மணிஷ் சிசோடியாவிற்கு எதிராக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

    இன்று நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்பு

    இன்று நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்பு

    மணிஷ் சிசோடியாவுக்கு தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியதும் அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ததும் டெல்லி அரசியல் வட்டாரத்தில் மட்டும் இன்றி தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய பரபரப்பான சூழலில் அரவிந்த் கெஜ்ரிவாலும் மணிஷ் சிசோடியாவும் குஜராத் தேர்தல் பிரசாரத்திற்கு, அங்கு செல்ல இருப்பது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஹிமத்நகரில் நடைபெறும் கூட்டத்தில் இன்று இருவரும் பங்கேற்று பேசுகிறார்கள். நாளை பாவ்நகரில் நடைபெறும் கூட்டத்தில் உரையாட உள்ளனர்.

     கலந்துரையாடல் நிகழ்ச்சியில்

    கலந்துரையாடல் நிகழ்ச்சியில்

    தனது குஜராத் சுற்றுப்பயணம் குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று தனது ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் "திங்கள் கிழமை நானும் மணிஷ் சிசோடியாவும் இரண்டு நாள் பயணமாக குஜராத் செல்கிறோம். டெல்லியை போல குஜராத்திலும் தரமான பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளை பெறும். அனைவருக்கும் தரமான இலவச கல்வி, தரமான சிகிச்சைகள் கிடைக்கும். நாங்கள் இளைஞர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கிறோம்" என பதிவிட்டுள்ளார்.

     தேர்தல் வாக்குறுதிகள்

    தேர்தல் வாக்குறுதிகள்

    குஜராத் சட்டமன்ற தேர்தலுக்காக இரண்டு கட்டமாக வேட்பாளர்கள் பட்டியலையும் ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது. நாங்கள் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் இலவச மின்சாரம், வேலையில்லாதவர்களுக்கு உதவி தொகை, குழந்தைகளுக்கு இலவச கல்வி உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை ஆம் ஆத்மி கட்சி அளித்து இருக்கிறது.

    English summary
    Arvind Kejriwal and Manish Sisodia are going to speak at a meeting to be held in Gujarat today to campaign for the election this year.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X