For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டெல்லி குடிநீர் வாரிய 800 அதிகாரிகள் திடீர் இடமாற்றம்- முதல்வர் கேஜ்ரிவால் அதிரடி!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் குடிநீர் வாரியத்தின் 800 அதிகாரிகளை ஒரே நாளில் அதிரடியாக இட மாற்றம் செய்ய முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், டெல்லி குடிநீர் வாரிய தலைவராகவும் இருக்கிறார். அவர் பதவி ஏற்ற அன்றே குடிநீர் வாரிய தலைமை செயல் அதிகாரி தேபஸ்ரீ முகர்ஜி இடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், குடிநீர் வாரிய பணிகளை மேம்படுத்தும் நடவடிக்கையாக, அதன் அதிகாரிகள் 800-க்கும் மேற்பட்டோரை இடமாற்றம் செய்ய அரவிந்த் கேஜ்ரிவால் உத்தரவிட்டார்.

Arvind Kejriwal transfers 800 Delhi Jal Board officials

அதன்பேரில், நேற்று இரவு அவர்களுக்கு இடமாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது. மேலும், லஞ்சம் வாங்கிய டெல்லி குடிநீர் வாரிய ஊழியர்கள் வினோத் குமார், பட்வாரி சுனில்குமார், அது பிரகாஷ் ஆகியோர் சஸ்பென்ட் செய்யப்பட்டனர். அவர்கள் லஞ்சம் வாங்குவதை, தனியார் தொலைக்காட்சி சேனல் ரகசியமாக படம் பிடித்து அம்பலப்படுத்தியதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

English summary
Around 800 officials of Delhi Jal Board were tonight transferred by the AAP government in a massive reshuffle in the water distribution utility aimed at improving its service delivery mechanism.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X