For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ப்ளூவேல்.. தக்க நேரத்தில் தடுத்து சிறுவன் உயிரை காப்பாற்றிய ஆசிரியர்கள்

ப்ளூவேல் கேம் விளையாடிய அஸ்ஸாம் மாநில மாணவர், அவர் விபரீத முடிவை எடுப்பதற்கு முன்னர் அவரை மீட்கப்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

குவாஹாட்டி: ப்ளூவேல் கேம் விளையாடிய அஸ்ஸாம் மாநில மாணவரின் கையில் ப்ளுவேல் வரைந்திருந்ததை பார்த்த அவரது ஆசிரியர் பெற்றோரை உஷார்படுத்தியதால் அவர் உயிருடன் மீட்கப்பட்டார்.

Recommended Video

    உலகை ஆட்டி படைக்கும் "ப்ளூவேல் கேம்"- வீடியோ

    உலக நாடுகளையே உலுக்கி வரும் விளையாட்டான ப்ளூவேல் விளையாட்டு தற்போது பெரும்பாலான சிறுவர்களின் உயிரை குடித்து வருகிறது. 50 நிலைகளை கொண்ட இந்த விளையாட்டில் தனது உடலை வருத்திக் கொள்வது, பேய் படங்களை பார்க்க வைப்பது உள்ளிட்ட டாஸ்க்குகளை செய்துவிட்டு இறுதியாக உயிரை மாய்த்து கொள்வதே இந்த விளையாட்டாகும்.

    Assam Student admitted in hospital after attempting Blue Whale, Parents alerted

    இதில் ஏராளமான குழந்தைகள் அடிமையாகி விளையாடி தன்னுடைய உயிரை மாய்த்து வருகின்றனர். இந்நிலையில் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவர் இந்த ஆன்லைன் கேமை விளையாடத் தொடங்கியுள்ளார்.

    சில நாள்கள் கழித்து இவரது கையில் நீல திமிங்கலம் வரைந்திருந்ததை மாணவனின் ஆசிரியர் கவனித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அந்த மாணவர் விபரீத முடிவை எடுப்பதில் இருந்து தடுக்கப்பட்டு அவர் குவாஹாட்டியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இந்த மாணவர் விளையாட்டின் மீதுள்ள மோகத்தால் மருத்துவமனையிலிருந்து தப்பிக்க முயற்சிப்பதாகவும் தெரிகிறது. இதனால் அவரது பெற்றோரும், மருத்துவர்களும் அந்த மாணவனை கண்காணித்து வருகின்றனர்.

    English summary
    Teachers of the boy had alerted parents after observing some changes in his behaviour after playing Blue Whale game.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X