சித்தூரில் ஆட்டோ மீது லாரி மோதியதில் மூன்று பெண்கள் பலி: வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருப்பதி: சித்தூரில் ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

சித்தூர் அருகே உறவினரின் வீட்டு விழாவில் பங்கேற்க சென்றுவிட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆட்டோவில் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது ஏற்பேடு மண்டலம், ஜங்காளவள்ளி அருகே ஆட்டோ மீது லாரி மோதியது. இதனால் ஏற்பட்ட விபத்தில் சீதம்மா, நாகம்மா என்ற இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

Auto met with an accident near Chittur Andra pradesh

மேலும் சாந்தா என்பவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். அதுமட்டுமில்லாமல் ஆட்டோவில் பயணம் செய்த மற்ற ஐந்து பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் அனைவரையும் சித்தூர் அரசு மருத்த்வமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Near Chittur auto and lorry hit on and in this accident 3 ladies of same family died and 5 more persons heavily injured.
Please Wait while comments are loading...