For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விஐபிகள் காரில் இருந்து சுழல் விளக்கு நீக்கப்பட்டதற்கு காரணம் இது தானம்! மோடியே சொல்லிட்டாரு!

விஐபிகள் காரில் இருந்து சுழல் விளக்கு நீக்கப்பட்டதற்கான காரணத்தை பிரதமர் மோடி தெனது மான் கீபாத் உரையில் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: விஐபிகள் காரில் இருந்து சுழல் விளக்கு நீக்கப்பட்டதற்கான காரணத்தை பிரதமர் மோடி தெனது மான் கீபாத் உரையில் தெரிவித்துள்ளார். சிலரின் மனதிலிருந்து விஐபி என்ற எண்ணத்தை அகற்றவே சுழல்விளக்கை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி மாதம் தோறும் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுகிழமைகளில் ரேடியோவில் மான் கி பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் பல்வேறு விஷயங்கள் குறித்து உரையாற்றி வருகிறார். அந்த வகையில் ஏப்ரல் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று ஆல் இந்தியா ரேடியோ மூலம் நாட்டு மக்களிடம் அவர் உரையாற்றினார்.

அப்போது பருவநிலை மாற்றம் குறித்து பிரதமர் மோடி பேசினார். முன்பெல்லாம் மே மற்றும் ஜுன் மாதத்தில் உணரும் வெயில் இப்போது ஏப்ரல் மாதமே உணரப்படுகிறது என்றார்.

வெயிலுக்கு உதவுங்கள்

வெயிலுக்கு உதவுங்கள்

இந்த கோடையில் பறவைகள் மற்றும் விலங்குகளை பாதுகாக்க வேண்டியது மிகவும் தேவையானது. கோடையில் வீடு தேடிவரும் பால்காரர்கள், காய்கறி வியாபாரிகள் மற்றும் அஞ்சல்காரர்களுக்கு தண்ணீர் கொடுத்து உதவுங்கள் என்றார்.

புதிய திறமைகளை..

புதிய திறமைகளை..

மாணவர்கள் கோடை விடுமுறையை எப்படி செலவிட வேண்டும் என்று பேசிய பிரதமர் மோடி, விடுமுறை காலங்களில் மாணவர்கள் புதிய திறமைகளை வளர்த்துக் கொள்ளவேண்டும் என அறிவுரை வழங்கினார்.
விடுமுறை காலங்களில் வேறு மொழிகளை கற்றுக் கொள்ளுதல், நீச்சல் மற்றும் ஓவியம் போன்ற துறைகளில் கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் மோடி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளார்.

விஐபி எண்ணத்தை அகற்ற

விஐபி எண்ணத்தை அகற்ற

விஐபிகள் காரில் இருந்து சிகப்பு சுழல் விளக்கு நீக்கம் பிரதமர் மோடி, சிலரின் மனதிலிருந்து விஐபி என்ற எண்ணத்தை அகற்றவே சுழல்விளக்கை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. புதிய இந்தியாவின் நோக்கமானது எல்லோரும் முக்கியமானவர்கள் என்பதே என்றும் அவர் கூறினார்.

புதிய ஆற்றலை கொடுக்கும்

புதிய ஆற்றலை கொடுக்கும்

நாம் நம்முடைய கலாசாரம், வரலாற்றை நினைவுப்படுத்திக்கொள்ள வேண்டும், இது நமக்கு புதிய ஆற்றலை கொடுக்கும். சமூகநீதிக்கு பாடுபட்ட ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டுவிழா கொண்டாடப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது என்றும் பிரதமர் மோடி கூறினார்.

English summary
Prime Mminister Modi says that students should utilise the leave. Beaconns removed from the VIPs car for remove the thought of some VIPs Modi said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X