For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாஜக ஆளும் 5 மாநிலங்களில் மாட்டிறைச்சிக்கு தடை- ஆயிரக்கணக்கான இறைச்சி கூடங்கள் மூடல்!

உத்தரப்பிரதேச மாநிலத்தை போன்று பாஜக ஆட்சியில் உள்ள 5 மாநிலங்களில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் மாட்டிறைச்சிக் கூடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலத்தை போன்று பாஜக ஆட்சியில் உள்ள பிற 5 மாநிலங்களில் மாட்டிறைச்சிக்கு தடை விதித்து அதன் கூடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.

கடந்த சட்டசபை தேர்தலில் உ.பி.யில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் அந்த மாநிலத்தில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டது. இதே போன்று ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் மாட்டிறைச்சி கூடங்களுக்கு கடந்த திங்கள்கிழமை சீல் வைக்கப்பட்டது.

Beef banned in all the ruling states of BJP

இந்நிலையில் ராஜஸ்தான், உத்தரகாண்ட், சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் ஆட்சியில் உள்ள பாஜக, செவ்வாய்க்கிழமை அங்கு உள்ள சட்டவிரோத இறைச்சிக் கூடங்கள் மீது நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

ராஜஸ்தான், உத்தரகாண்ட், சத்தீஷ்கார் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் செவ்வாய் அன்று மாநில பா.ஜனதா அரசுக்கள் சட்டவிரோதமாக செயல்பட்ட இறைச்சி கூடங்கள் மீது நடவடிக்கைகளை எடுத்து உள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் 11 இறைச்சி கூடங்களும், ம.பி. மாநிலம், இந்தூரில் ஒரு இறைச்சி கூடத்துக்கு சீல் வைக்கப்பட்டது. ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் 4 ஆயிரம் சட்டவிரோத இறைச்சிக் கூடங்களும் மூடப்பட்டன. மேலும் இதுபோன்று சட்டவிரோதமாக செயல்படும் விற்பனை கூடங்களுக்கு ஏப்ரல் மாதம் முதல் சீல் வைக்கப்படும் என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இறைச்சிக் கடைக்கான உரிமங்கள் கடந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைந்துவிட்டது. மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் இறைச்சி கடைகளுக்கு உரிமம் வழங்குவதற்கான கட்டணத்தை ரூ. 10-ல் இருந்து ரூ. 1000 ஆக உயர்த்த அனுமதி பெறப்பட்டு உள்ளது, ஆனால் அரசிதழில் வெளியிடப்படவில்லை, எனவே உரிமங்களை புதுப்பிக்க முடியவில்லை என இறைச்சிக் கடை உரிமையாளர்கள் தெரிவித்ததனர்.

English summary
Illegal Beef shops are banned and selaed in UP. Like wise, BJP's regime in other 5 states too implemented this.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X