எலக்ட்ரானிக் சிட்டி முதல் சில்க்போர்டுவரை வெள்ளம், டிராபிக் ஜாம்.. பெங்களூரில் ஐடி ஊழியர்கள் அவதி

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: சில்க்போர்டு, எலக்ட்ரானிக் சிட்டி உள்ளிட்ட தெற்கு பெங்களூரில் பெய்த கன மழை மற்றும் அதை சார்ந்த வெள்ளத்தால் ஐடி ஊழியர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

பெங்களூரில் தமிழகத்தை சேர்ந்த லட்சக்கணக்கான ஐடி ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். எலக்ட்ரானிக் சிட்டி, மாரத்தஹள்ளி உள்ளிட்ட பல பகுதிகளிலுள்ள ஐடி நிறுவனங்களில் அவர்கள் வேலை பார்க்கிறார்கள்.

Bengaluru IT Empolyees under struggle as heavy rain lashes

இவர்கள் பெரும்பாலும், மடிவாளா, பொம்மனஹள்ளி, பேகூர் ரோடு, கோரமங்களா மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தங்கியிருக்கிறார்கள். சில்க்போர்டு ஜக்ஷன்தான் இந்த ஐடி கிளஸ்டர்களுக்கு நடுநாயகமாக உள்ள பகுதியாகும்.

ஆனால் இன்று மதியம் முதல் மாலை வரை பெய்த கன மழையால் அதிகம் பாதிக்கப்பட்டது எலக்ட்ரானிக் சிட்டி முதல், சில்க்போர்டு வரையிலான 12 கி.மீ நீள பகுதிதான். எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் முட்டி அளவுக்கு சாலையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் வாகனங்கள் நகரவே சிரமப்பட்டனர். இதனால் நீண்ட வரிசையில் வாகனங்கள் நின்று டிராபிக் ஜாம் ஏற்பட்டது.

சில்க்போர்டு-ஒசூர் சாலையிலும் வெள்ளம் தேங்கியதால் வாகனங்கள் கடும் போக்குவரத்து நெரிசலை சந்தித்தன. மாலையில் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய ஐடி ஊழியர்கள் பெரும் சிரமப்பட்டனர். வீடு வந்து சேர்வதற்குள் பெரும்பாடுபட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+