For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோவா முதல்வர் லட்சுமிகாந்த் பர்சேகர் தோல்வி… மனோகர் பாரிக்கரின் நம்பிக்கை நட்சத்திரம் தகர்ந்தது

கோவா சட்டசபைத் தேர்தலுக்காக பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் இன்று காலை தொடங்கியது. இதில் மன்ட்ரேம் தொகுதியில் அம்மாநில முதல்வராக இருக்கும் லட்சுமிகாந்த் பர்சேகர் தோல்வி அடைந்துள்ளார்.

Google Oneindia Tamil News

பானாஜி: கோவாவில் கடந்த 4ம் தேதி நடைபெற்ற வாக்குப் பதிவு நடைபெற்ற நிலையில், இன்று வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கின. இதில் காங்கிரஸ் 16 இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில், அம்மாநில முதல்வர் லட்சுமிகாந்த் பர்சேகர் 4898 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்துள்ளார்.

கோவா சட்டசபை தொகுதிகள் மொத்தம் 40. இந்தத் தொகுதிகளுக்கான தேர்தல் பிப்ரவரி மாதம் 4ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. தேர்தலின் போது பதிவு செய்யப்பட்ட வாக்குகள் எண்ணும் பணிகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

வட கோவாவின் 19 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் பணிகள் கேம்பால் பாலபவனிலும் தென் கோவாவிற்கான வாக்கு எண்ணிக்கை போர்டாவில் உள்ள அரசு கல்லூரியிலும் நடைபெற்று வருகிறது.

பாஜக பின்னடைவு

பாஜக பின்னடைவு

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே காங்கிரஸ் கட்சி முன்னிலையில் இருந்தது. தற்போது அது 16 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. 13 இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது.

முதல்வர் தோல்வி

முதல்வர் தோல்வி

அம்மாநில முதல்வர் லட்சுமிகாந்த் பர்சேகர் மன்ட்ரேம் தொகுதியில் போட்டியிட்டார். இதே தொகுதியில் 4வது முறையாக போட்டியிட்ட அவர் காங்கிரஸ் வேட்பாளர் தயானந்த் சோப்தேவிடம் தோல்வி தழுவினார்.

நம்பிக்கை நட்சத்திரம்

நம்பிக்கை நட்சத்திரம்

மத்திய அமைச்சராக மனோகர் பாரிக்கர் பொறுப்பேற்ற பின்னர், கோவா மாநிலத்தில் முதல்வராக லட்சுமிகாந்த் பர்சேகர் பதவி ஏற்றார். இந்த முறையும் பாஜக வென்று ஆட்சியைப் பிடிக்கும் என்று எதிர்ப்பார்த்திருந்த நிலையில் அவர் தோல்வி அடைந்துள்ளார்.

தகர்ந்த கனவு

தகர்ந்த கனவு

பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரின் நம்பிக்கைக்குரியை நபராக திகழ்ந்த லட்சுமிகாந்த் பரிசேகர் 4898 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்திருப்பது கோவாவில் மீண்டும் பாஜக ஆட்சி என்ற கனவை தகர்த்திருக்கிறது.

English summary
Goa CM Laxmikant Parsekar was defeated by congress candidate Dayanand Sopte in Mandrem constituency.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X