திருமலை திருப்பதி தேவஸ்தானம் எடுத்த திடீர் முடிவு.. பாஜக கடும் எதிர்ப்பு

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானம் தனது பட்ஜெட்டில் 1 சதவீத நிதியை திருப்பதி மாநகர வளர்ச்சிக்காக செலவிட முடிவு செய்திருப்பதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

உலகின் இரண்டாவது பெரிய பணக்கார கடவுளான எம்பெருமான் ஏழுமலையானை தரிசனம் செய்ய தினமும் பல்லாயிரம் பக்தர்கள் வருகிறார்கள். அப்படி வரும் பக்தர்கள் திருப்பதி உண்டியலில் கோடிக்கணக்கில் காணிக்கை செலுத்துகிறார்கள்.அப்படி இதுவரை வந்த பணம் மற்றும் நகைகளின் மதிப்பு பல லட்சம் கோடிகளாக உள்ளது.

BJP strongly opposed Decision to spend 1 percent of Devasthanam budget for development of Tirupati

அப்படி வரும் பணத்தை திருப்பதிக்கு வரும் பக்தர்களின் வசதிக்காகவும், திருப்பதி கோயிலின் அடிப்படை கட்டமைப்பு பணிகளுக்காகவும் குறிப்பிட்ட அளவு செலவிடப்படுகிறது. மேலும் திருப்பதி கோயில் ஊழியர்களின் சம்பளம் மற்றும் கோயில்களின் அன்னதானம் உள்பட செலவுகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட அளவு பணத்தை பட்ஜெட் ஒதுக்கி, அதனை தான் பயன்படுத்தி வருகிறது.

இதனிடையே திருமலை திருப்பதி தேவஸ்தானம் தனது பட்ஜெட்டில் 1 சதவீத நிதியை திருப்பதி மாநகர வளர்ச்சிக்காக செலவிட முடிவு செய்திருக்கிறது. இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாஜக செய்தி தொடர்பாளர் சதினேனி யாமினி சர்மா கூறுகையில், "பொதுமக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நன்கொடையாக அளிக்கிறார்கள். ஆனால் அவர்களின் நன்கொடை பணத்தை எடுக்க முடிவுசெய்திருப்பதன் மூலம் இந்துக்களின் உணர்வுகளை திருப்பதி தேவஸ்தானம் புண்படுத்துகிறது.

திருப்பதி கோவிலின் புனிதத்தைப் பாதுகாத்து ஆன்மீக மையமாக வளர்த்தெடுக்க வேண்டும். மாறாக கோவிலை பணம் புரளும் பொருளாக தேவஸ்தானம் மாற்றக்கூடாது. பக்தர்கள் மற்றும் இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தாமல் இவர்களுக்கு ஒரு நாளும் கழிவதில்லை.

தேவஸ்தான விதிகளின்படி 1 சதவீதம் செலவழிக்க வாய்ப்பே இல்லை. இப்போது 1 சதவீதம் திருப்பதி நகருக்கு செலவழிக்கப்போவதாக சொல்வார்கள். பின்னர் நாளை அது 10 அல்லது 50 சதவீதமாக அதிகரிக்க கூடும். இப்படி செய்தால் திருமலையில் தூப தீப நைவேத்யத்திற்கான செலவுகளைச் சமாளிக்க தேவஸ்தான கருவூலமே வறண்டுவிடும்.கோயில் வசம் எந்த நிதியும் இருக்காது என்று பக்தர்கள் பயப்படுகிறார்கள். இதே போக்கு மற்ற கோவில்களிலும் தொடர்ந்தால், பக்தர்கள் கொடுக்கும் நன்கொடைக்கு யார் பொறுப்பு? ஏற்பார்கள்.

BJP strongly opposed Decision to spend 1 percent of Devasthanam budget for development of Tirupati

அதேநேரம் திருப்பதி நகர ஊழியர்களின் சம்பளம் மற்றும் திருப்பதி நகரின் வளர்ச்சிக்கு பாஜக எதிரானது அல்ல. ஆனால், கோவில் நிதியை ஏன் பயன்படுத்த வேண்டும்? மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல கோடி ரூபாய்களை வழங்கி வருகிறது. மேலும் மேலும், மக்கள் மற்றும் வணிகர்கள் வியாபாரிகள் வரி செலுத்தி வருகிறார்கள். அந்தப் பணம் எல்லாம் எங்கே போய்விட்டது? பக்தர்களின் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு கோவில் நிதியை ஊழியர்களுக்காக பயன்படுத்தியதாக ஆந்திர அரசு வாதிடுகிறது.

உண்மையில், திருப்பதியில் ஆயிரக்கணக்கான கோடி வணிகம் மற்றும் அது வசூலிக்கும் வரிகளை பார்க்கும் போது, ஆந்திர அரசு தான் பணத்தை கோவிலுக்கு செலுத்த வேண்டும். திருப்பதி தேவஸ்தான தலைவர் மற்றும் அறக்கட்டளை வாரிய நியமனங்கள் அரசியல் மறுவாழ்வு மையங்களாக மாறிவிட்டன. மேலும் அவர்களின் முடிவுகளை ஏற்க முடியாது. எனவே ஏற்கத்தக்கதாக இல்லை. திருமலை திருப்பதி தேவஸ்தானம் தனது பட்ஜெட்டில் 1 சதவீத நிதியை திருப்பதி மாநகர வளர்ச்சிக்காக செலவிட முடிவு செய்திருப்பதற்கு பாஜக போராடும்.இதுபோன்ற முடிவுகளை பாஜக கண்டிப்பாக எதிர்க்கும்" இவ்வாறு பாஜக செய்தி தொடர்பாளர் சதினேனி யாமினி சர்மா கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+