கர்நாடகாவில் பாஜக ஆட்சி.. இனியாவது காவிரி நீர் தமிழகத்திற்கு வருமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil
  கர்நாடகாவில் பாஜக வெற்றி பெற காரணம்- வீடியோ

  பெங்களூரு: கர்நாடகாவில் பாஜக ஆட்சி உறுதியாகி உள்ள நிலையில் இனியாவது காவிரி நீர் தமிழகத்திற்கு வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

  கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டிருக்கிறது. கர்நாடகாவில் தொங்கு சட்டசபைதான் அமையும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருந்தன.

  ஆனால் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் கர்நாடகாவில் ஆட்சியமைக்கிறது. இதனால் அக்கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

  பாஜக ஆட்சி அமைந்தால்

  பாஜக ஆட்சி அமைந்தால்

  கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைந்தால் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் கிடைக்கும் என தமிழக பாஜக தலைவர்களான தமிழிசை சவுந்தரராஜன், எச் ராஜா, வானதி ஸ்ரீனிவாசன், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கூறி வந்தனர்.

  இரண்டு முறை வாய்தா

  இரண்டு முறை வாய்தா

  காவிரி தொடர்பான வழக்கில் வரைவு திட்ட அறிக்கையை கர்நாடக தேர்தலை காரணம் காட்டி உச்சநீதிமன்றத்தில் இரண்டு முறை வாய்தா வாங்கியது மத்திய அரசு.

  மத்திய அரசு தயார்

  மத்திய அரசு தயார்

  கர்நாடகாவில் தேர்தல் முடிந்த நிலையில் நேற்று வரைவு திட்ட அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மத்திய அரசு உச்சநீதிமன்ற உத்தரவை செயல்படுத்த தயாராக உள்ளது என உறுதியளித்தது.

  காவிரி நீர் கிடைக்குமா?

  காவிரி நீர் கிடைக்குமா?

  இந்நிலையில் கர்நாடக தேர்தலில் பாஜக வெற்றி உறுதியாகியுள்ளதால் தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைக்குமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழக பாஜக தலைவர்கள் கூறியபடியே தமிழகத்திற்கு காவிரி நீர் வந்து சேருமா? பொருத்திருந்து பார்ப்போம்..

  வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  BJP wins in Karnataka, whether Tamilnadu will get Cauvery water hereafter.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற