திரிபுராவில் தமிழக வீரர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை

Posted By:
Subscribe to Oneindia Tamil

அகர்தலா: திரிபுராவில் எல்லைப்பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

எல்லைப்பாதுகாப்புப்படையில் மன அழுத்தம் காரணமாக வீரர்கள் அடிக்கடி தற்கொலை செய்து கொள்வது வாடிக்கையாகி வருகிறது.

Bsf jawan suicide in Tripura

ஆரணி அருகே இலுப்பகுணம் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன். 29 வயதாகும் இவர், திரிபுரா மாநிலத்தில் எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் இன்று காலையில் கார்த்திக்கேயன் தனது கையில் வைத்திருந்த துப்பாக்கியால் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கார்த்திக்கேயன் மரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A 29 year old BSB jawan name Karthikeyan commits suicide in Tiripura, on Thursday.
Please Wait while comments are loading...