குஜராத்தில் உள்ள நிறுவனங்களுக்கு நேரடியாக நிதி ஒதுக்கும் மத்திய அரசு! 350% அதிகரிப்பு: சிஏஜி அறிக்கை
அகமதாபாத்: மாநிலத்தின் வருடாந்திர நிதி கணக்குகளில் குறிப்பிடப்படாத, தனியார் அறக்கட்டளைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் உட்பட குஜராத்தில் உள்ள பல்வேறு நிறுவனங்களுக்கு மத்திய அரசிடமிருந்து நேரடியாக வழங்கப்பட்ட நிதி அளவு 2015 முதல் 350 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்று கட்டுப்பாட்டு மற்றும் கணக்காய்வாளர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.
குஜராத் சட்டசபையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்ட சிஏஜி நிதி தணிக்கை அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு வழங்கும் திட்டங்கள் மற்றும் கூடுதல் மத்திய உதவிகளுக்கான அனைத்து உதவிகளையும் மாநில அரசு மூலமாக செயல்படுத்த ஏப்ரல் 1, 2014 முதல் மத்திய அரசு முடிவு செய்தது. ஆனால் குஜராத்தில், மத்திய நிதி நேரடியாக மாநிலத்திலுள்ள நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. 2019-20 காலத்திலும் இது தொடர்ந்தது.

350 சதவிகிதம் அதிகரிப்பு
மத்திய அரசால் நேரடியாக மாற்றப்பட்ட நிதிகளின் அளவு, 2015-16-ல் ரூ. 2,542
கோடியாக இருந்த நிலையில், 2019-20-இல் 350 சதவிகிதம் அதிகரித்து ரூ .11,659
கோடியாக உயர்ந்துள்ளது என்று சிஏஜி சுட்டிக்காட்டியுள்ளது. அந்த
அறிக்கையில், மத்திய அரசு தனியார் துறை நிறுவனங்கள் (ரூ. 837 கோடி),
தனியார் கல்வி நிறுவனங்கள் (ரூ .17 கோடி), அறக்கட்டளைகள் (ரூ .79 கோடி),
பதிவு செய்யப்பட்ட சங்கங்கள் என்ஜிஓக்கள் (ரூ. 18.35 கோடி) ஆகியவற்றுக்கு
எப்படி கணிசமான நிதி நேரடியாக வழங்கப்பட்டது என்பதையும் குறிப்பிட்டுள்ளது.
மற்றும் 2019-20 இல் தனிநபர்களுக்கு ரூ. 1.56 கோடி பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மாநில பட்ஜெட் மூலமாக செல்லவில்லை
சமூக மற்றும் பொருளாதாரத் துறைகளில் பல்வேறு திட்டங்களுக்காக மத்திய அரசு நேரடியாக பணம் கொடுத்துள்ளது. மாநில பட்ஜெட் அல்லது மாநில கருவூல அமைப்பு மூலம் வழங்கப்பட்டிருக்க வேண்டியதாகும். வருடாந்திர நிதி கணக்குகள் அத்தகைய நிதியை கண்டுபிடிக்க முடியவில்லை என்று சிஏஜி தெரிவித்துள்ளது.

என்ன திட்டங்கள்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்திற்கு ரூ. 593 கோடி
நிதி நேரடியாக மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்
உள்ளூர் பகுதி வளர்ச்சி திட்டத்திற்கு ரூ.182 கோடி மற்றும் பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனாவிற்கு ரூ .97 கோடி நேரடியாக வழங்கப்பட்டுள்ளது.

மாநில அரசு நிறுவனங்களுக்கு அதிக நிதி
குஜராத்தில் செயல்படுத்தும் நிறுவனங்களில், மத்திய அரசிடமிருந்து 2019-20 ஆம் ஆண்டில் பெருமளவு நிதியைப் பெற்றது, மாநில அரசு நிறுவனங்கள்தான். அவை
ரூ. 3,406 கோடி நிதி பெற்றன., மாநில அரசு பொதுத்துறை நிறுவனங்கள் ரூ. 3,389 கோடி, மத்திய அரசு நிறுவனங்கள் ரூ .1,826 கோடி, மற்றும் அரசு மற்றும் தன்னாட்சி பதிவு செய்யப்பட்ட சங்கங்கள் ரூ. 1,069 கோடி.

மத்திய அரசின் நேரடி கண்காணிப்பு
அகமதாபாத்தை சேருங்க
சர்தார் படேல் பொருளாதார மற்றும் சமூக ஆராய்ச்சி நிறுவனத்தில் பிரபல பொருளாதார நிபுணரும் பேராசிரியருமான பேராசிரியர் ஒய் கே அலக் கூறுகையில்,
"ஒரு மாநிலத்தில் மத்திய அரசு திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசுக்கு உரிமை உண்டு.
இருப்பினும், மெட்ரோ போன்ற வணிகத் திட்டங்களில் ஆட்சேபனைகள் உள்ளன.
இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் வாதங்கள் உள்ளன. நேரடிப் பணப் பரிமாற்றம் என்பது மிகவும் தீவிரமான பிரச்சினையாகும், அங்கு குறிப்பிட்ட அளவுகோல்களின்
அடிப்படையில் தனிநபர்களுக்குப் பணம் ஒதுக்கப்படுகிறது. சிலருக்கு தகுதி இருந்தும் நிதி உதவி கிடைக்காமல் போக வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தை மத்திய அரசு தனது நேரடி கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பதைப் போல இந்த புள்ளிவிவரம் சுட்டிக்காட்டி இருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications