இந்து தீவிரவாதம்: நடிகர் கமல்ஹாசனுக்கு எதிராக உ.பி. கோர்ட்டில் வழக்கு

Posted By:
Subscribe to Oneindia Tamil

லக்னோ: இந்து தீவிரவாம் என விமர்சித்ததால் நடிகர் கமல்ஹாசன் மீது நடவடிக்கை கோரி உத்தரப்பிரதேச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்து தீவிரவாதத்தை நடிகர் கமல்ஹாசன் விமர்சித்து வார இதழில் கட்டுரை எழுதியிருந்தார். இதற்கு பாஜக உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் கமல்ஹாசனுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன.

Case filed against Kamal Haasan in UP

நடிகர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் பாஜக தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க கோரி உத்தரப்பிரதேச மாநிலம் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

மதத்துக்கு எதிராக கருத்து தெரிவித்தல், அவதூறாக பேசுதல் ஆகியவற்றுக்காக கமல்ஹாசன் மீது குற்றவியல் சட்ட பிரிவுகள் 500, 511, 298, 295(a), 505(c) ஆகிய 5 பிரிவுகளில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனு மீது நாளை விசாரணை நடைபெற உள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Case filed against Actor Kamal Haasan in UP Court.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற