For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ஸ்பெக்ட்ரம்': கலைஞர் டிவி தொலைபேசி டேப்- விசாரணை நடத்துகிறது சிபிஐ

By Mathi
Google Oneindia Tamil News

cbi
டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கலைஞர் டிவி தொடர்பாக வெளியாகி இருக்கும் புதிய தொலைபேசி உரையாடல்கள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.

ஸ்பெக்ட்ரம் வழக்கில் நேற்று வெளியான புதிய தொலைபேசி உரையாடல் சி.டி மீண்டும் புயலை கிளப்பியுள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டுகள் மற்றும் சி.டி. ஆதாரங்கள் பொய்யானவை என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி மறுத்துள்ளார்.

இந் நிலையில் ஸ்பெக்ட்ரம் தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகள் அடிப்படையில் கிடைத்துள்ள ஆதாரங்கள் உண்மையானவையா என்பது குறித்து விசாரிக்க சி.பி.ஐ. தலைமையகம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து சி.பி.ஐ. அதிகாரி ஒருவர் கூறுகையில், ஊடகங்களில் வந்த செய்திகளைப் பார்த்தோம். வெளியிடப்பட்டுள்ள ஒலி நாடாக்களின் உண்மை தன்மை குறித்து ஆராய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விவரங்கள் பற்றி சட்டப்படி விசாரணை நடத்தப்படும் என்றார்.

English summary
The Central Bureau of Investigation (CBI) will examine the alleged conversation between M.S. Jaffar Sait, when he was the Additional Director-General of Police (Intelligence), Tamil Nadu, and Sharad Kumar Reddy, former managing director of Kalaignar TV, which was published in a section of the media a couple of days ago.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X