ரூ.400 கோடி கடனுக்கு ரோலக்ஸ் கடிகாரங்கள் லஞ்சம்: சிபிஐயிடம் சிக்கிய எஸ்பிஐ அதிகாரி

'வோர்ல்ட்ஸ் வின்டோ குரூப்' என்ற உலோக வர்த்தக நிறுவனம், தனது வர்த்தகத்தை விரிவுபடுத்த, ரூ 400 கோடி ரூபாய் வங்கிக் கடன் வேண்டி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் விண்ணப்பித்தது.
இது தொடர்பாக அந்நிறுவனத்தின் தலைவர், பியூஷ் கோயலை, ஸ்டேட் பாங்கின், ஓய்வுபெற்ற முன்னாள் கூடுதல் பொது மேலாளர், கே.கே.குமரய்யா என்பவர் அணுகி, வங்கி மேலிட நிர்வாகத்தில் தனக்கு உள்ள செல்வாக்கை பயன்படுத்தி, கடன் பெற்று தருவதாக தெரிவித்துள்ளார்.
கடன் பெற்றுத் தருவதற்காக ரகசிய பேரம் நட்டத்தியுள்ளார் குமரய்யா. அதன்படி, தனக்கு, 25 லடசம் ரூபாயும், துணை நிர்வாக இயக்குனர், ஷியாமல் ஆச்சார்யாவுக்கு, 15 லட்சம் ரூபாயும் பெற்றுள்ளார். அதில், ஆச்சார்யாவுக்காக, 7.75 லட்ச ரூபாய் மதிப்பில், ரோலக்ஸ் மற்றும் ஓமேகா கடிகாரங்களை வாங்கியுள்ளதாகவும், மீதமுள்ள பணத்தை, ஆச்சார்யாவிடம் வழங்கவுள்ளதாக, கோயலிடம் கூறியுள்ளார் குமரய்யா.
இது குறித்து தகவல் அறிந்த சி.பி.ஐ கடிகாரங்களை கொடுக்கச் சென்ற பொது குமரய்யாவைக் கைது செய்தது. அவரிடம் நடத்தப் பட்ட விசாரணையில், ஆச்சார்யாவிடம் கடிகாரங்களை ஒப்படைத்ததை ஒத்துக் கொண்டார் குமரய்யா.
அதனைத் தொடர்ந்து இன்று வரை கோர்ட் காவலில் வைத்து குமரய்யாவை விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையில், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா நிர்வாகம், ஷியாமல் ஆச்சார்யா மீது துறை ரீதியிலான விசாரணை நடத்தி, விடுமுறையில் செல்ல அனுமதியளித்துள்ளது.
இந்நிலையில், ஆச்சார்யா வீட்டில் சோதனை நடத்திய, சி.பி.ஐ., அதிகாரிகள், 67 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் நிரந்தர வைப்பு நிதி முதலீடுகளை பறிமுதல் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications