Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சாய்வாலா.. உங்களை தரக்குறைவாக விமர்சிப்பது பிடிக்கவில்லை என்ற பெண்.. பிரதமர் மோடி கூறிய ‛நச்’ பதில்

Subscribe to Oneindia Tamil

காந்தி நகர்: ‛‛உங்களை ‛சாய்வாலா' என தவறான வகையில் விமர்சிப்பது பிடிக்கவில்லை'' என பிரதமர் நரேந்திர மோடியிடம் பெண் ஒருவர் கூறினார். இதைக்கேட்ட பிரதமர் நரேந்திர மோடி ‛நச்' என்று பதில் ஒன்றை அளித்தார்.

குஜராத் மாநிலத்துக்கு இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தொடர்ச்சியாக அங்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று குஜராத் மாநிலத்தில் பல்வேறு திட்டப்பணிகளை துவக்கி வைத்தார்.

குஜராத்தில் பிரதமர் மோடி

குஜராத்தில் பிரதமர் மோடி

குஜராத்தின் சபர்கந்தா மாவட்டம் ஹிம்மத்நகர் அருகே கதோடா சவுக்கியில் உள்ள சபர் பால் பண்ணையில் ரூ.1,000 கோடி மதிப்பில் 3 திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். அதன்படி தினமும் 120 டன் உற்பத்தி திறன் கொண்ட பால் பவுடர் ஆலை, நாளொன்றுக்கு 3 லட்சம் லிட்டர் பதப்படுத்திய பாலை பாக்கெட்டில் அடைக்கும் ஆலை ஆகியவற்றை அவர் திறந்து வைத்தார். அதோடு ரூ.600 கோடி செலவிலான பால் பொருட்கள் உற்பத்தி ஆலைக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

கலந்துரையாடிய மோடி

கலந்துரையாடிய மோடி

இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, கால்நடை வளர்க்கும் 20 பெண்களுடன் கலந்துரையாடினார். அப்போது, ஒரு பெண்ணுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கு இடையே சுவாரசியமான உரையாடல் நடந்தது. அதாவது ‛‛உங்களை (பிரதமர் நரேந்திர மோடி) உங்களை அநாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சனம் செய்வது எனக்கு பிடிக்கவில்லை.

முதலிடத்தில் குஜராத்

முதலிடத்தில் குஜராத்

குஜராத் இன்றும் முதலிடத்தில் உள்ளது. இதனால் உங்களை விமர்சனம் செய்வதை நாங்கள் விரும்பவில்லை. 2001 நிலநடுக்கத்துக்க பிறகு குஜராத்தை மீண்டும் தலைநிமிர செய்ய நீங்கள் போராடுவதை நாங்கள் பார்த்தோம். சாய்வாலா அல்லது மவுத்கா சவுதாகர் என உங்களை முத்திரை குத்தி விமர்சனம் செய்தாலும் நீங்கள் மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்து வருகிறீர்கள்'' என கூறினார்.

Recommended Video

    Chess Olympiad 2022: தமிழகத்திற்கும் சதுரங்கத்திற்கும் நீண்ட தொடர்பு உள்ளது - PM Modi
    பிரதமர் மோடி கூறியது என்ன?

    பிரதமர் மோடி கூறியது என்ன?

    இதை கேட்ட பிரதமர் நரேந்திர மோடி, அந்த பெண்ணுக்கு பதிலளித்தார். அப்போது, அவர் ‛‛சேவை செய்ய மக்களின் ஆசீர்வாதம் மட்டுமே தேவை. மக்கள் தங்கள் விருப்பப்படி என்ன கூறினாலும் கூட நாம் தொடர்ந்து மக்கள் பணியை செய்து வர வேண்டும் '' என்றார். இந்த வேளையில் குறுக்கீட்ட பெண்கள், ‛‛எங்களின் ஆசீர்வாதம் எப்போதும் உங்களுக்கு உண்டு'' என்றார். இதனை கேட்டு பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ந்து போனார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+