For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஐ.பி. புதிய தலைவர் தினேஷ்வர் ஷர்மாவுக்கு முன் உள்ள சவால்கள்

By Mathi
Google Oneindia Tamil News

Challenges ahead for the new IB chief Dineshwar Sharma
டெல்லி: நாட்டின் மத்திய உளவு அமைப்பான ஐ.பி.யின் புதிய தலைவராக தினேஷ்வர் ஷர்மா நியமிக்கப்படலாம் என்ற நிலையில் அவர் முன்னர் பல்வேறு புதிய சவால்களும் அணிவகுத்து நிற்கின்றன.

ஐ.பி.யின் புதிய தலைவர் பதவிக்கு அசோக் பிரசாத் மற்றும் டி.பி. சின்ஹா ஆகியோரது பெயர்களும் அடிபடுகின்றன. இந்த நிலையில் ஐ.பி. தலைவராக தினேஷ்வர் ஷர்மாவின் பொறுப்பேற்கும் போது மற்றொரு கேரளா கேடரான தேசிய பாதுகாப்பு ஆலோசர் அஜித் தோவலுடன் அவர் இணைந்து செயல்படுவது எளிதான ஒன்றாக இருக்கும்.

தற்போதைய நிலையில் தினேஷ்வர் ஷர்மா முன்னுள்ள சவால்களும் அவருக்கான சாதகமான அம்சங்களும்..

  • உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருக்கும் தற்போதைய சூழலில் உள்துறை அமைச்சகம், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருடன் ஐபி தலைவர் ஒருங்கிணைந்து செயல்பட்டாக வேண்டிய தருணம் இது..
  • மிக முக்கியமாக உளவு அமைப்பின் காலியாக உள்ள சுமார் 30% பணியிடங்களை நிரப்ப வேண்டிய கட்டாயம். மொத்தம் 26,800 பணியிடங்கள் இருக்க வேண்டிய உளவு அமைப்பில் 18,800 பேர் அளவில்தான் இருக்கின்றனர்.
  • ஐ.எஸ்.ஐ.எஸ். மற்றும் அல்கொய்தா ஆகிய அமைப்புகள் இந்தியாவில் தங்களது கிளைகளை அமைக்கப் போவதாக அறிவித்திருப்பது மிகப் பெரிய சவாலான அச்சுறுத்தலாகும்.
  • சிமி மற்றும் இந்தியன் முஜாஹிதீன் ஆகிய உள்நாட்டு தீவிரவாத அமைப்புகள் மேலும் பல குழுக்களாகி இந்தியாவுக்குள் இயங்கி வருவதும் மிகவும் ஆபத்தான ஒன்றாகும்.
  • ஆப்கானிஸ்தானில் நேட்டோ படைகள் வெளியேறும் நிலையில் அதனை தமது ஆதரவு தீவிரவாதிகள் மூலம் கைப்பற்றுவதற்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக இந்தியாவிலும் கணிசமாக ஆட்களை தேர்தெடுப்பதில் ஐ.எஸ்.ஐ. முனைப்பு காட்டி வருவதால் மாநில உளவு அமைப்புகளுடன் ஐபி ஒருங்கிணைந்து செயல்பட்டாக வேண்டும்.
  • அண்மைக்காலமாக சமூக விரோதிகள், பயங்கரவாத அமைப்பினருக்கு புகலிடம் தருமிடமாக கேரளா உருவெடுத்திருக்கிறது. வெளிநாடுகளில் இருந்தும் உள்நாட்டில் தாக்குதல் நடத்திவிட்டும் சரி தீவிரவாதிகள் புகலிடம் கோரும் இடமாக கேரளா உருமாறி இருக்கிறது. தற்போது ஐபி தலைவர் தினேஷ்வர் ஷர்மா, கேரளா கேடர் என்பதால் அவருக்கு இந்த போக்கு குறித்த தகவல்கள் தெரிந்திருக்கும் என்பது சாதகமான ஒரு அம்சமாக பார்க்கலாம். அதுவும் கேரளா கேடரான அஜித் தோவலும் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருப்பது இருவருக்கும் நாட்டுக்கும் மிகவும் சாதகமானதாகும்.
English summary
Dineshwar Sharma is the new chief of the Intelligence Bureau and what strikes the most is that that like the National Security Advisor Ajit Doval he too is a Kerala cadre officer.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X