டெல்லி பட்ஜெட் கோப்புகளை ஏற்றுக்கொள்ளாத தலைமை செயலாளர்.. குழப்பத்தில் கெஜ்ரிவால்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  அருண் ஜெட்லியை குறை சொல்லும் ராகுல்- வீடியோ

  டெல்லி: டெல்லி பட்ஜெட் தாக்கல் செய்ய சில நாட்களே இருக்கும் நிலையில், அம்மாநில தலைமை செயலாளர் இன்னும் பட்ஜெட் சம்பந்தமான கோப்புகளை ஏற்றுக்கொள்ளவில்லை என்று புகார் எழுந்து இருக்கிறது.

  டெல்லியில் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் இன்னும் சில தினங்களில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில் பட்ஜெட் விவரங்களை பார்த்து அம்மாநில தலைமை செயலாளர் அன்ஷு பிரகாஷ் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

  Chief Secretary refuses to accept files related Delhi Budget

  ஆனால் அது சார்ந்த விவரங்கள் அனைத்தும் இன்னும் அன்ஷு ஏற்றுக்கொள்ளவில்லை என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

  இது குறித்து ''பல முக்கியமான விஷயங்களை இந்த பட்ஜெட் மூலம் நிறையவேற்ற இருக்கிறோம். மருத்துவம் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட இருக்கிறது'' என்றுள்ளார்.

  மேலும் ''ஆனால் இன்னும் சில தினங்களே இருந்தும் தலைமை செயலாளர் கோப்புகளை ஏற்றுக்கொள்ளவில்லை. வேண்டுமென்றே மத்திய அரசு பேச்சை கேட்டு இப்படி செய்கிறார்'' என்று குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Chief Secretary refuses to accept files related Delhi Budget. Delhi CM Arvind Kejrival becomes on him due to this problem.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற