300 வீரர்கள்.. பெரும் சதியோடு வந்த சீனா! “சல்லி சல்லி”யாக நொறுக்கிய இந்திய படை -எல்லையில் செம “மாஸ்”
இடாநகர்: அருணாச்சல பிரதேச எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இந்தியா ராணுவ வீரர்களை நோக்கி 300 பேர் கொண்ட படையோடு சீனா தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியான நிலையில், அது குறித்த கூடுதல் தகவல்கள் கிடைத்து உள்ளன.
இந்தியாவின் எல்லைக்கு உட்பட்ட அருணாச்சல பிரதேச மாநிலத்தின் பகுதிகளை ஆக்கிரமிக்க சீனா பல ஆண்டுகளாக முயற்சித்து வருகிறது. குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக எல்லை பகுதிகளை ஆக்கிரமித்தும் இருக்கிறது.
இந்திய எல்லைக்குள் வீடுகள், சாலைகளை அமைத்த சீனா அங்கு ஒரு நகரத்தையே உருவாக்கி இருப்பதை சாண்டிலைட் புகைப்படங்களின் மூலம் அறிய முடிந்தது. இதுகுறித்து எதிர்க்கட்சிகளும் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பி இருந்தனர்.

பாதுகாப்பு பணி
இதனால் இந்தியா சீனா இடையே மோதல் போக்குகள் பல ஆண்டுகளாக நீடித்து வருகின்றன. இந்த நிலையில், சீன எல்லையோரத்தில் அமைந்து உள்ள அருணாச்சல பிரதேசத்தின் தவாங் பகுதியில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே இந்தியா மற்றும் சீன ராணுவ வீரர்கள் வழக்கம்போல் கடந்த 9 ஆம் தேதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்திருக்கின்றனர்.

சீனா தாக்குதல்
அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இருநாட்டு ராணுவ வீரர்களை நோக்கி சீன படையினர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு மத்தியில் மோதல் எற்பட்டு ஒருவர் மீது ஒருவர் தாக்குதலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இந்த தாக்குதலில் இருநாட்டு ராணுவ வீரர்களுக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டன.

பேச்சுவார்த்தை
வீரர்களுக்கு இடையே மோதல் வெடித்த சிறிது நேரத்திலேயே, எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இந்திய ராணுவ அதிகாரிகள் மற்றும் சீன ராணுவ அதிகாரிகள் அமர்ந்து இரு தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் இரு நாட்டு ராணுவ வீரர்களை அமைதிப்படுத்துவது மற்றும் தாக்குதல் நடந்த இடத்தில் இயல்பு நிலையை கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

திட்டமிட்டு வந்த சீனா
9 ஆம் தேதி நடந்த இரு தரப்பு மோதல் குறித்த தகவல் 3 நாட்கள் கழித்து நேற்று வெளியான நிலையில், இதில் சீனாவுக்கே அதிக பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது திடீரென நடத்தப்பட்ட தாக்குதல் இல்லை எனவும், சீனா முன் ஏற்பாட்டுடன் 300 வீரர்களை தாக்குதலுக்காக தயார்படுத்தி கொண்டு வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருப்பியடித்த இந்தியா
ஆனால், சுதாரித்துக் கொண்ட இந்திய படையினர் பதில் தாக்குதல் நடத்தி சீன ராணுவத்தை விரட்டியத்துவிட்டதாகவும், இதனை சீன படையினர் துளி கூட எதிர்பார்க்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்திய வீரர்கள் நடத்திய பதிலடி தாக்குதலில் சீனா வீரர்களே அதிகளவில் காயம் அடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கல்வான் பள்ளத்தாக்கில் சீனா அத்துமீறல்
கடந்த 2020 ஆம் ஆண்டு இதேபோல் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீனா படைகள் அத்துமீறி இந்திய எல்லைக்குள் வந்தனர். அவர்களின் ஊடுருவலை தடுக்க முயன்ற இந்திய பாதுகாப்பு படையினருக்கும் சீன ராணுவத்தினருக்கும் கடுமையான மோதல் ஏற்பட்டதில் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன.
-
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
வெளிநாட்டு சுற்றுப்பயணம்.. எந்த வீரருக்கும் இல்லாத ஸ்பெஷல் சலுகை! சூர்யவன்ஷிக்காக இறங்கி வரும் பிசிசிஐ -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
தங்கத்தை தாறுமாறாக வாங்கி குவிக்கும் உலக நாடுகளின் மத்திய வங்கிகள்.. சீனா செய்த பெரிய சம்பவம் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது












Click it and Unblock the Notifications